leo trailer: லியோ படம் துவங்கியதில் இருந்தே விஜய் ரசிகர்கள் மூளையில் இருந்த ஒரே விஷயம் ‘லியோ. லியோ’ மட்டுமே. ஏனெனில் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என லோகேஷ் அடித்து ஆடியதில் அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.
ஒருபக்கம், லியோ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் விஜய் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வந்தது. இப்படத்தில் அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் என பல நடிகர்களும் நடித்ததால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இது போக இன்னும் பல நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டில் விஜயின் தரிசனம் கிடைக்கும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, லியோ டிரெய்லர் வெளியாவதாக அறிவித்தனர். எனவே, விஜய் மிகவும் ஆவலுடன் இதை எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், லியோ டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் காஷ்மீரில் மனைவியுடன் வசித்து வருவது போலவும், வில்லன் குரூப் அவரை தேடி வந்து கொல்ல வருவது போலவும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது.
அதோடு, லியோவை போலவே விஜய் இருப்பதால் அவர்கள் அவரை தேடி வருவது போலவும் அவன் யார் என்றெ எனக்கு தெரியாது என விஜய் கெட்டவார்த்தையில் திட்டும் காட்சியும், ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது.
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில்…
இந்திய சினிமா…