சல்லி சல்லியா ஒடச்சிட்டீங்களேப்பா..! அப்போ இது லோகி கதையில்லையா… ஓபனாக சொன்ன லலித்..!

Published on: October 22, 2023
---Advertisement---

Leo Movie: விஜய் நடித்த லியோ படம் எப்போ தான் ரிலீஸ் ஆகும் என பலருக்கும் இருந்த ஏக்கத்தினை போக்கும் விதமாக தியேட்டர்களில் ரிலீஸாகி மூன்று நாள் கடந்து விட்டது. ஆனால் ஆகாஓஹோ என பேச்சுகள் வரும் என நினைத்தால் ஒரே நெகட்டிவ் விமர்சனமே அதிகமாக குவிந்து வருகிறது. 

விஜய் நடித்துள்ள லியோ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன் என வில்லன் பட்டியலே படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியது. படமும் முதல் சிங்கிள் இருந்து ரிலீஸ் வரை பல கட்ட எதிர்ப்பை சந்தித்தது.

இதையும் படிங்க: படம் பார்க்க அங்க போய்ட்டாங்க!.. வசூல்லாம் போச்சி!.. புலம்பும் லியோ பட தயாரிப்பாளர்….

ஏற்கனவே படத்தில் விஜய்க்கும், லோகேஷ் கனகராஜுக்கும் சண்டை வந்ததாகவும், பாதி படத்தினை ரத்னகுமார் தான் இயக்கியதாகவும் கூட ஒரு சர்ச்சை வேறு நிலவியது. ஆனால் அதற்கு லலித்குமார், லோகேஷ் என அனைவருமே மறுப்பு தெரிவித்தனர்.

லோகேஷ் படங்கள் எப்போதும் தனி லெவலில் இருக்கும். ஆனால் ரிலீஸாகி இருக்கும் லியோ படத்தின் இரண்டாம் பகுதி மிகப்பெரிய தொய்வை சந்தித்து இருக்கிறதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு உண்மை காரணத்தினை ரசிகர்களே ஆராய்ந்து கண்டும் பிடித்து விட்டனர். 

சமீபத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் அளித்த பேட்டியில் முதலில் பீஸ்ட் படத்தினை முடித்த விஜய் நேரடியாக லியோ படத்தில் தான் நடிக்க இருந்தார். ஆனால் விக்ரம் படத்தினை முடித்து விட்டு லோகேஷ் வருவதற்கு நேரம் எடுத்தது. அதனால் தான் வாரிசு படத்தில் நடிக்க சென்றார்.

இதையும் படிங்க: லியோ ஃபீவர் ஓவர்… தளபதி 68 வீடியோவை களம் இறக்கும் வெங்கட்பிரபு… லீக்கான அப்டேட்!…

அவர் கதையை விஜயிடம் சொல்லி ஓகே வாங்கிய பின்னரே என்னிடம் கதை சொன்னார். அன்று இரவு விஜய் போன் செய்து ஓகேவா எனக் கேட்டார். நான் எல்லாம் ஓகே ஆனால் சில மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். அதனை கேட்ட விஜய் உடனே லோகேஷை அழைத்து நான் கேட்டதை செய்து கொடுத்தார்.

மேலும் படத்தில் ஒரு சண்டைக்காட்சியை லோகேஷ் சின்ன காட்சியாக வைத்து இருந்தார். நாங்கள் அதை அதிகமாக மாற்ற சொன்னோம். இன்னும் சில காட்சிகள் இருக்கு. அதை இப்போது சொல்ல முடியாது எனவும் கூறி இருக்கிறார். அப்போ நீங்களா சேந்து தான் லியோ பர்னிச்சரை உடைச்சீங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

லலித் பேட்டியைக் காண: https://twitter.com/ManobalaV/status/1715648431098826955

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.