Categories: Cinema News latest news

லியோ படத்தில் நீ இருப்பியாமா… அனுராதா மகன் ஆசையாக கேட்ட விஷயம்.. ஆனா கடைசியில் செம ட்விஸ்ட்டே..!

Anuradha: தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பீட் சாங் பாடும் பாடகிகள் தோற்றமே கொஞ்சம் ஸ்டைலிஷாக இருக்கும். ஆனால் பார்க்கவே பாந்தமாக எப்போதுமே சேலையில் வலம் வரும் அனுராதா ஸ்ரீராம். தன்னுடைய கேரியரில் நிறைய பீட் சாங்ஸ் தான் பாடி இருக்கிறார்.

அதிலும் அவர் விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடிக்கும் படத்தில் கண்டிப்பாக ஒரு பீட் பாடலை பாடி விடுவார். கில்லி படத்தில் அப்படிப்போடு, திருப்பாச்சி படத்தில் அப்பன் பண்ண தப்பில, ஆதி படத்தில் ஒல்லி ஒல்லி இடுப்பே, குருவி படத்தில் மொழ மொழனு உள்ளிட்ட ஹிட் பாடலை பாடி இருக்கிறார்.

இதையும் வாசிங்க:அழுது புலம்பிய மீனாவுக்கு சரியான அட்வைஸ் கொடுத்த அம்மா..! ஸ்ருதி ஆசையை கெடுத்த ரவி..!

லியோ பட அறிவிப்பு வந்தவுடன் த்ரிஷா தான் நாயகி என்பதால் அனுராதாவின் இரண்டாவது மகன் லோகேஷ் அவருக்கு கால் செய்தாராம். அம்மா, நீங்க ஏற்கனவே த்ரிஷா, விஜய் இருவரும் ஜோடியாக நடித்த எல்லா படங்களிலும் ஒரு பாடல் பாடி இருக்கீங்க. இந்தப் படத்துக்கு பாட கூப்பிடுவாங்களா எனக் கேட்டு இருக்கிறார்.

ஆனால் அனுராதா தெரியாதுப்பா. அப்போ இருந்த துறை வேற இப்போ வேற இல்லையா. கூப்பிட்டா பார்க்கலாம் எனச் சொல்லிவிட்டார். இதனால் மகன் அப்செட்டில் போனை வைத்து விட்டாராம். படமும் ரிலீஸாக இருக்கிறது. அவர் மகன் முதல் நாள் ஷோ வெளிநாட்டில் பார்க்க தியேட்டர் போய் இருக்கிறார்.

படத்தினை பார்த்து கொண்டு இருந்தவருக்கு காபி ஷாப்பில் மகளுக்காக விஜய் நடனம் ஆட துள்ளி குதித்து விட்டாராம். விஷயத்தினை கேட்டால் அது எங்க பாட்டுடா என நண்பர்களிடம் சொல்ல அனைவருக்குமே ஆச்சரியமாகி விட்டதாம். அவன் ஆசை நடந்து விட்டது. இந்த பாட்டை வைத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என தன்னுடைய பேட்டியில் அனுராதா தெரிவித்து இருக்கிறார்.

இதையும் வாசிங்க: கண்ணதாசன் மீது சந்தேகப்பட்ட பந்துலு… ஆனா நடந்ததே வேற… பின்ன கவியரசர்னா சும்மாவா?…

Published by
Akhilan