More
Categories: Cinema News latest news

இதுதான் ஆரம்பம்! இனிமேதான் ஆட்டமே இருக்கு – ரிலீசுக்கு முன்பே ‘ஜெயிலர்’ வசுல் சாதனையை தவிடுபொடியாக்கிய லியோ

leo vs Jailer:  விஜயின் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது லியோ திரைப்படம். லோகேஷ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்திருக்கும் விஜயின் லியோ திரைப்படத்தை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை ரிலீசுக்கு முன்பே முறியடித்திருக்கிறது. ஆகஸ்ட மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் கிட்டத்தட்ட 700 கோடியை நெருங்கி சாதனை படைத்தது. இனிமேல் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என ரஜினி ரசிகர்கள் இருமாப்பு கொண்டிருந்தனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: முதல் அடியே மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா.!. ஜெயிலரின் அந்த சாதனையை காலி செய்த லியோ..!

ஆனால் ரிலீசுக்கு முன்பாகவே லியோ திரைப்படம் ஜெயிலரின் சாதனையை ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறது. இரண்டாவது சிங்கிள் வெளியாகி 16 மணி நேரத்தில் ஜெயிலரை விட அதிக பார்வையாளர்களை கொண்டு சாதனையை படைத்தது. இப்போது இங்கிலாந்தில் படம் ரிலீஸாகும் 6 வாரத்திற்கு முன்பே லியோ படத்தின் டிக்கெட்களின் விற்பனை துவக்கம் ஆரம்பமானது.

ஆரம்பமான முதலே டிக்கெட் மளமளவென விற்பனையானது. இதன் மூலம் இங்கிலாந்தில் ஜெயிலர் படம் பெற்ற மொத்த வசூலை ரிலீசுக்கு  முன்பாகவே லியோ படம் பெற்று விட்டது.அதுமட்டுமில்லாமல் ஜெர்மனியிலும் லியோதான் முன்னேறியிருக்கிறது. தற்போது வரை ஜெர்மனியில் 2500க்கும் மேலாக டிக்கெட்கள் விற்பனையாகிருக்கிறது. இதன் மூலம் 68500 யூரோக்களை லியோ படம் வசூலித்திருக்கிறது.

இதையும் படிங்க: பேர்லயே மிரட்டிய சைக்கோ படங்கள்! ஜெயம் ரவிக்கு முன்பே ரசிகர்களை அலறவிட்ட நடிகர்கள்

ஆனால் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலே ஜெர்மனியில் 66141 யூரோக்கள்தானாம். இதன் மூலம் ஜெர்மனியில் அதிக வசூலை பெற்ற படமாக முதலிடத்தில் பொன்னியின் செல்வன் படமும் இரண்டாவது இடத்தில் கமலின் விக்ரம் படமும் மூன்றாவது இடத்தில் இப்போது லியோ படமும் உள்ளது. இது ரிலீசுக்கு முன்பாக வரை உள்ள நிலவரம். ரிலீ

இதையும் படிங்க: கன கச்சிதமா இருக்கு கட்டழகு!.. தாராளம் காட்டி விருந்து வைக்கும் பிரியாமணி….

 

Published by
Rohini

Recent Posts