சத்தியமா இனிமே அதை பண்ணவே மாட்டேன்!.. சொன்னதை காற்றில் பறக்கவிட்ட விஜய்..
நடிகர் விஜய் படங்கள் வெளியாகும் போது சில விஷயங்கள் சர்ச்சை ஆகும். மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி விஜய் பேசிய வசனத்திற்கு பாஜகவை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜயை ஜோசப் விஜய் என விமர்சனம் செய்தனர்.
அதற்கு முன் அவர் ‘தலைவா’ படத்தில் நடித்தபோது அப்படத்தின் டைட்டிலில் போடப்பட்டிருந்த 'Time to lead' என்கிற வார்த்தை அப்போதைய ஆளும் கட்சியை கோபப்படுத்த பட ரிலீஸே 2 நாட்கள் தள்ளிப்போனது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிலிருந்து தான் நடிக்கும் திரைப்படங்களில் அரசியல் வசனங்களை விஜய் தவிர்த்துவந்தார்.
அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சர்கார் படத்தின்போதும் பிரச்சனை எழுந்தது. அந்த படம் வெளியான தியேட்டர்களின் பேனர்கள் கிழிக்கப்பட்டது. மேலும், அப்படத்திற்காக அவர் சிகரெட் பிடிப்பது போல வெளியான போஸ்டர் வெளியாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது. எனவே, இனிமேல் அது போல் நடக்காது. சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக செய்திகளும் வெளியானது.
இந்நிலையில், லியோ படத்தின் முதல் சிங்கிள் அவரின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்து ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அதில், விஜய் வாயில் சுருட்டு வைத்திருப்பது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, விஜய் சொன்னது காத்தோடு போச்சி என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.