More
Read more!
Categories: Cinema News latest news

ஆடியோ லாஞ்ச் போனா என்ன!.. ரசிகர்களை சந்திக்க வரும் விஜய்!.. பெரிய சம்பவத்துக்கு ரெடியாகும் தளபதி…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

பின் பிரியமானவளே, பூவே உனக்காக போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார். இவரது இவ்வித வளார்ச்சிக்கு இவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரக்சேகரே காரணமாகும். அவரது முயற்சியினாலே விஜய் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:தூய்மை பாரத திட்டம்: பழங்குடி மக்களின் வீடுகள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்த ஈஷா தன்னார்வலர்கள்!

பின் சர்கார், பிகில், தெறி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இப்படியான விஜய் தற்போது அரசியலுக்கு வரும் எண்ணத்திலும் உள்ளார். இவர் அரசியலுக்கு வரும் நோக்கில் தனது ரசிகர்களின் மூலம் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்.

இவர் நடிப்பில் இந்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம்தான் லியோ. இத்திரைப்படத்தின இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதையும் வாசிங்க:‘அயலான்’ படத்தில் மியூஸிக் டைரக்டரை மாத்திட்டாங்களா? என்னடா இது ரஹ்மானுக்கு வந்த சோதனை?

பொதுவாக எந்தவொரு படங்கள் வெளியாவதிற்கு முன் இசை வெளியீட்டு விழா நடத்துவது வழக்கம்தான். அதைபோல் லியோ படக்குழுவும் செப்டம்பர் 28ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் ரசிகர் கூட்டத்தை சமாளிக்க முடியாது என இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர்.

இதற்கு பின்னால் அரசியல் சார்ந்த நிறைய காரணங்களும் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.இதில் விஜய், லோகேஷ் கனகராஜ் போன்று இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த செய்தி அனைத்து ரசிகர்களுக்கும் தற்போது விருந்து படைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதையும் வாசிங்க:அப்பாவிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு போன விஜய்!.. கடைசியில் எங்கே இருந்தார் தெரியுமா?…

Published by
amutha raja

Recent Posts