லியோ படத்தின் இண்டர்வெல் பிளாக்!.. விஜய் ரசிகர்களின் பல்ஸை எகிறவைக்கும் அப்டேட்...

வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. விக்ரம் மெகா ஹிட்டுக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் என்பதால் விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, லோகேஷின் படங்கள் ரசிகர்களுக்கு புதுவி்த அனுபவத்தை கொடுப்பதால் பொதுவான ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.
லோகேஷ் படங்கள் என்றாலே கேங்ஸ்டர் படங்களாகவே இருக்கிறது. அவர் இயக்கிய முதல் படம் மாநகரம் படமே கேங்ஸ்டர் படமாக வெளிவந்தது. அதோடு, விஜயை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படமும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியை பெற்றது. லியோ படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறுவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கிறது.
இதையும் படிங்க: மலேசியாவா?..சென்னையா?.. ஆடியோ லான்ச் எங்கே?.. விஜய் ஃபேன்ஸை குழப்பியடிக்கும் லியோ டீம்!…
இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதன் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்தனை நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடிப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒருபக்கம் இப்படம் தொடர்பான அப்டேட்டுகளும் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இப்படத்தில் நடிப்பவர்கள் பிறந்தநாள் எனில் படக்குழுவும் அவர்கள் தொடர்பான காட்சியை வைத்து வீடியோவை உருவாக்கி வெளியிட்டு விஜய் ரசிகர்களின் பல்ஸை எகிற விடுகின்றனர். ஏற்கனவே சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரின் பிறந்தநாளில் தெறிக்கவிடும் வீடியோக்கள் வெளியானது.
இதையும் படிங்க: டைட்டில் மட்டுமல்ல ரஜினியின் மாஸ் ஹிட்டும் காப்பி தான்… லியோ படக்கதை இது தானா?
ஒருபக்கம் இப்படத்தின் 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சி சும்மா தீயா இருக்கும் என யாரோ சொல்லிவிட்டனர். விஜய் ரசிகர்கள் இதை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு சந்தோஷப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், லியோ படத்தின் 8 நிமிட இண்டர்வெல் பிளாக் காட்சிகள் வேறலெவலில் இருக்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இப்போது சொல்லிவிட்டார்.
எனவே, விஜய் ரசிகர்கள் இந்த தகவலையும் இணையத்தில் பகிர்ந்து சந்தோஷப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: யார் என்ன கொக்கி போட்டாலும், சொல்லிடாதீங்கணே… லோகேஷ் பேச்சை மீறாத லியோ படக்குழு!