Cinema News
யானைக்கும் அடி சறுக்கும்! அத மட்டும் எதிர்பார்க்காதீங்க – ‘லியோ’ பத்தி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க
Leo Movie: இன்று பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கிறது லியோ திரைப்படம். விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் அனிருத்தின் தாறு மாறு இசையில் சில பல பிரச்சினைகளை கடந்து படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்கில் ரிலீஸாகி ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகிறார்கள்.
கேரளாவில் அதிகாலை 5 மணி காட்சிகளில் லியோ படத்தை ரிலீஸ் செய்து அங்கு உள்ள ரசிகர்கள் படத்தை தாறு மாறு தக்காளி சோறு என புகழ்ந்து வருகின்றனர். இங்கு காலை 9 மணி முதல் முதல்காட்சி வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: லியோ எல்சியூ தான்!.. ஆக்ஷனில் மட்டுமில்லை ஆக்டிங்கிலும் அசுரத்தனத்தை காட்டிய விஜய்.. ட்விட்டர் விமர்சனம்!
படத்தை பார்க்க லோகேஷ் மற்றும் அனிருத் ஆகியோர் வந்திருந்தனர். இதற்கிடையில் ஆர்வமிகுதியில் ரசிகர்கள் முக்கியமான ட்விஸ்ட்களை இணையத்திலேயே அவிழ்த்துவிட்டு வருகின்றனர். அதில் கேரளாவில் இருந்து ரசிகர்கள் படம் பார்த்த அனுபவத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்ற்னர். அதில்,
லோகேஷ் சொன்ன மாதிரி முதல் 10 நிமிடக் காட்சிகள் திரையரங்கை கிழிக்கும் படியான காட்சியாகத்தான் இருக்கின்றன என ஒரு சில ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதில் என்னதான் லோகேஷ் ஒரு திறமையான இயக்குனராக அறியப்பட்டாலும் ஒரு கட்டத்தில் அவருக்கும் கதை தேவைப்பட்டிருக்கலாம்.
இதையும் படிங்க: கச்சேரியில் சிவாஜி பாடலை பாட மறுத்த டி.எம்.எஸ்! அதற்கு காரணம் அவருடைய கொள்கையாம் – என்னவா இருக்கும்?
அப்படித்தான் லியோவில் அவர் கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்றும் கூறிவருகிறார்கள். லியோ ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரே புள்ளியிலேயே நகர்வதாகவும் சொல்கிறார்கள். முதல் பாதி சூப்பர் என்றும் இரண்டாம் பாதி முழுக்க சண்டைக் காட்சிகளிலேயே படத்தை ஓட்டியிருக்கிறார் என்றும் கூறிவருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் விக்ரம் படத்தை மிஞ்சும் அளவுக்கு லியோவில் அப்படி ஒன்றுமில்லை என்றும் ஆனால் படம் சூப்பராக இருக்கிறது. இன்னும் மெனக்கிட்டிருக்கலாம் என்றும் கூறிவருகிறார்கள்.
இதையும் படிங்க: BiggBossSeason7: ஆத்தி! அடுத்தடுத்த ரெண்டு ‘வைல்டு கார்டு எண்ட்ரி’ இவங்க தானா?… ‘சூடு’ பிடிக்கப்போகுது ஆட்டம்!
எப்படி இருந்தாலும் விஜயை கொண்டாடுபவர்கள் இந்தப் படத்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் வாய்ப்பிருக்கிறது . அதே வேளையில் ஹேட்டர்ஸ்கள் இந்த மாதிரியான விமர்சனங்களையும் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என பொதுவான ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இருந்தாலும் லியோ படம் எந்தளவு உச்சத்தை பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.