இந்திய சினிமாவே இன்னைக்கு விஜய்யை திரும்பி பார்க்குது!.. லியோ வெற்றி விழாவில் அர்ஜுன் செம ஸ்பீச்!..

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஒருவழியாக பர்மிஷன் எல்லாம் கிடைத்த நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.

அதில், நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மடோனா செபாஸ்டியன், சாண்டி, லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், மன்சூர் அலி கான், ஜார்ஜ் மரியன், ஜனனி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: லியோ வெற்றி விழாவில் ரஜினிகாந்தை வம்பிழுத்த ரத்னகுமார்!.. தலைவர் 171 பக்கம் தலைவைக்க முடியாதே!..

வெகு விரைவில் சன் டிவியில் லியோ வெற்றி விழா ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், லியோ வெற்றி விழாவில் மேடை ஏறி பேசிய நடிகர் அர்ஜுன் சின்ன வயசுல இருந்தே எனக்கு விஜய்யை தெரியும். ரொம்பவே ஷை டைப்.. ஆனால், இன்னைக்கு தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு நடிகராக விஜய் மாறியுள்ளார் என்பதை பார்க்கும் போதே பெருமையா இருக்கு.. முன்பெல்லாம் எங்கேயாவது வெளியே போனால் என்னை பார்ப்பவர்கள் ஜெய் ஹிந்த் எனக் கூறுவார்கள். ஆனால், லியோ படத்துக்கு பிறகு தெறிக்க என்று தான் சொல்கின்றனர்.

லியோ படம் எனக்கு மீண்டும் ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை கொடுத்த லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்க்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசிய அர்ஜுன் நடிகர் விஜய்யிடம் ஒரு கேள்வியையும் முன் வைத்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படிங்க: லியோ பட விழாவில் நடந்த மாபெரும் மோசடி!.. அடுத்த ரஹ்மான் நிகழ்ச்சியாக மாறிய சக்சஸ் மீட்…

விஜய்யா இருப்பது ஈஸியா? டஃப்பா? என கேட்க, வெளியில இருந்து பார்க்கறவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா தெரியலாம்.. ஆனால், எனக்கு ஈஸியாத்தான் இருக்கு.. எல்லாத்துக்கும் தோ இவங்க தான் காரணம் என ரசிகர்களை நோக்கி கை காட்டி அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

 

Related Articles

Next Story