Connect with us

Cinema News

ஜெயிலரை ஒரே வாரத்தில் புரட்டிப் போட்டு பொளந்துக்கட்டிய லியோ?.. புக் மை ஷோவில் தரமான சம்பவம்!..

லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் புக் மை ஷோவில் ஜெயிலர் படத்தை விட அதிக டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக அதை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், மேத்யூ தாமஸ், வையாபுரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி லியோ வெளியானது.

இதையும் படிங்க: கதையை கேட்டு தூங்கிய தயாரிப்பாளர்… நொந்துப்போன கார்த்திக் சுப்பாராஜ்… அட அந்த ஹிட் படமா?!..

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் புக் மை ஷோவில் அதிகபட்சமாக 6 மில்லியன் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்த நிலையில், அந்த சாதனையை விஜய் நடிப்பில் வெளியான லியோ முறியடித்து அதிகபட்சமாக 7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக புக்மைஷோவின் நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சக்சேனா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் நடித்த லியோ டிசாஸ்டர் என முதல் நாளில் இருந்து அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் நெகட்டிவ் ட்ரெண்டிங் செய்து வந்த நிலையிலும், புக் மை ஷோ, இங்கிலாந்தில் லியோ படத்தை வாங்கி வெளியிட்ட அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட், காசி தியேட்டர், ரோகினி தியேட்டர் என பல ஆதாரப்பூர்வ அறிவிப்புகள் லியோ படத்தின் வசூல் குறித்து வெளியாகி வரும் நிலையில், லியோ படத்தின் உண்மையான வசூலை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நீங்க தான் தலைவர்!.. தன்னடக்கத்தில் அமிதாப் பச்சனை யாரும் அடிச்சிக்க முடியாது.. ரஜினிக்கு பாராட்டு!..

ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்தால், லியோ வசூலை தலைவர் 170 அல்லது தலைவர் 171 நிச்சயம் முறியடிக்கும் என்றும் சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top