மனோபாலா மரணம்!.. லியோ படத்திற்கு வந்த சிக்கல்!.. எப்படி சமாளிக்க போகிறார் லோகேஷ்?!…
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்து இயக்குனராக மாறி பின் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மாறியவர் இவர். பல வெற்றிப்படங்களை மனோபாலா இயக்கியுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவிடம் சினிமா கற்றவர் மனோபாலா. 20 படங்களும் மேல் இவர் இயக்கியுள்ளார். ரஜினியை வைத்து ஊர்க்காவலன் படத்தை இயக்கியுள்ளார்.
கடந்த 20 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் இன்று யாரும் எதிர்பார்த்திராத நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார். இவரின் மரணம் தமிழ் சினிமா உலகினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவருக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக பல படங்களில் நடித்துவரும் ஒரு நடிகர் திடீரென இறந்துவிட்டால் அந்த படக்குழுவினருக்கு சிக்கல்தான். ஏனெனில், அந்த நடிகருக்கு பதில் வேறு நடிகரை போட்டு மீண்டும் முதலில் இருந்து எடுக்க வேண்டும். விவேக் இறந்தபோது லெஜெண்ட் மற்றும் இந்தியன் 2 படங்களுக்கு இந்த சிக்கல் வந்தது. தொழில் நுட்பம் மூலம் விவேக்கை சில காட்சிகளில் நடிக்க வைக்க ஷங்கர் முடிவெடுத்துள்ளதாக செய்திகளும் வெளியானது.
இந்நிலையில், லியோ படக்குழுவும் இந்த சிக்கலை சந்தித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் மனோபாலாவும் நடித்து வருகிறார். அவரின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா?.. இல்லை ஏற்கனவே எடுத்துவிட்டார்களா? என்கிற விபரம் மட்டும் இதுவரை தெரியவில்லை. ஒருவேளை எடுத்து கொண்டிருந்தாலும் சரி, எடுத்து முடித்திருந்தாலும் சரி… அவருக்கு பதில் வேறு நடிகரை போட்டு மீண்டும் அந்த காட்சிகளை எடுக்க வேண்டும். ஏனெனில் டப்பிங் பேச மனோபாலா இப்போது இல்லை.
லோகேஷ் கனகராஜ் என்ன செய்யப்போகிறார் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.