Connect with us
vijay

Cinema News

குட்டி ஸ்டோரியை சொல்ல ரெடியான விஜய்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்த ‘லியோ’ டீம்

Leo Success meet: விஜய் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

லலித் தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியான லியோ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றது. விமர்சன ரீதியாக ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. ஆங்காங்கே சில லாஜிக்கை லோகேஷ் மீறியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விஜயை நெகட்டிவாக காட்ட தான் இந்த காட்சி இருந்தது… சர்ச்சைக்கு பதில் சொல்லிய லியோ ஒளிப்பதிவாளர்..

விக்ரம் படம் மாதிரி வரவில்லை என்றாலும் எடுத்த கதையிலாவது ஓரளவு கவனம் செலுத்தி இருந்திருக்கலாம் என்றே பெரும்பாலான ரசிகர்கள் கூறிவந்தனர். எந்தவொரு இசை வெளியீட்டு விழாவும் நடத்தாமல் போஸ்ட் புரடக்‌ஷனிலும் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் ஆரம்பத்தில் இருந்தே படக்குழு தொய்வு காட்டி வந்தனர்.

சமூக வலைதளங்களிலும் படத்தை பற்றி கிண்டலடித்து நெட்டிசன்கள் தாறு மாறாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று திடீர் அறிவிப்பு ஒன்றை படத் தயாரிப்பாளர் வெளியிட்டிருக்கிறார். லியோ படம் பெருமளவு வெற்றி பெற்று விட்டதாக எண்ணி லலித் வெற்றி விழாவை கொண்டாட முடிவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க:ஏமாத்திய எல்லா ஹீரோக்களும் பல்ப்பா..? தமிழ் சினிமாவில் இந்த இடத்திற்கு வெற்றிடம்.. ப்ளூசட்டை மாறன் சாட்டையடி..!

நவம்பர் 1 ஆம் தேதி இந்தப் படத்தின் வெற்றிவிழாவை ஒட்டுமொத்த படக்குழுவும் சேர்ந்து நேரு விளையாட்டு அரங்கில் கொண்டாட இருக்கிறார்களாம். இந்த விழாவுக்கு விஜயும் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை படக்குழு அணுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினியையே காரி துப்பிய பிரபல இயக்குனர்..! படத்துக்காக இப்படியா..! என்ன படம் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top