Connect with us

Cinema News

படம் கொலைவெறியா இருக்குன்னு வராம போயிடாதீங்க!.. குடும்பங்களை வரவழைக்க லியோ டீம் போட்ட செம பிளான்!..

என்னதான் லியோ யு/ஏ சான்றிதழ் வாங்கி இருந்தாலும் அந்த படத்துல அதிகமான ஆபாசமான வசனங்களும், வன்முறை காட்சிகளும் தான் நிறைந்திருக்கும் என்பதை படக்குழுவினரே கூறியுள்ள நிலையில், இந்த முறை விஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாதோ? என்கிற கேள்வியை ரசிகர்கள் குறிப்பாக நண்பிகள் எழுப்பி வந்தனர்.

ஏனென்றால், சமீபத்தில் வெளியான லியோ டிரைலர் குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு குறிப்பாக குழந்தைகளுடன் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாச வசனத்துடன் கொடூரமாக இருந்தது.

இதையும் படிங்க: மொழி படத்தில் அப்படி நடிக்க எம்.எஸ்.பாஸ்கர் செஞ்ச விஷயம். டெடிகேஷன்னா அது இதுதான்!..

நடிகர் விஜய்யே யாருமே எதிர்பார்க்காத நிலையில், திடீரென அந்த கெட்ட வார்த்தையை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிவியில் பலர் தங்கள் குழந்தைகளுடன் லியோ ட்ரைலரை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த நிலையில், விஜய் அந்த வசனத்தை பேசியதும் அப்படியே ஆஃப் பண்ணி விட்டனர்.

இந்நிலையில், தியேட்டருக்கும் ரசிகர்கள் குழந்தைகளை கூட்டிக் கொண்டு வர மாட்டார்கள் என்கிற பேச்சுக்களில் இருந்து வரும் நிலையில், குடும்பங்களை தியேட்டருக்கு கொண்டு வர லியோ படத்தின் மூன்றாவது பாடலான “ அன்பெனும்” பாடல் நாளை வெளியாகிறது என்கிற அறிவிப்பை தற்போது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தளபதி68க்கும் விடாமுயற்சிக்கும் இவ்ளோ ஒற்றுமையா? ரியல் போட்டி ஆரம்பிச்சிருச்சு! அடிமடியில கைவைக்காம இருந்தா சரி

லியோ திரைப்படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவுக்கு மகளாக காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் இயல் நடித்திருக்கும் நிலையில், அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக் குலாவும் சந்தோசமான பாடலாக “அன்பெனும்” பாடல் அமைந்திருக்கும் என தெரிகிறது.

மேலும், காஷ்மீரின் கொள்ளை அழகையும் அந்தப் பாடலில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம் என்றும் தெரிகிறது. குடும்ப ரசிகர்களையும் குறிப்பாக குழந்தைகளின் கவரும் விதமாக அன்பிலும் பாடல் இருக்கும் என்று படக்குழுவினரே மெட்டல்ஸ் எல்லாம் தூக்கி போட்டுவிட்டு பெட்டல்ஸ் எடுப்போம் வாங்க என கேப்ஷன் கொடுத்து புரமோட் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top