Categories: latest news tamil movie reviews

லியோ எல்சியூ தான்!.. ஆக்‌ஷனில் மட்டுமில்லை ஆக்டிங்கிலும் அசுரத்தனத்தை காட்டிய விஜய்.. ட்விட்டர் விமர்சனம்!

லியோ எல்சியூவா? இல்லையா? என்கிற குழப்பங்கள் எல்லாம் லியோ படம் ரிலீஸ் ஆனதுமே தீர்ந்து விட்டது. சோஷியல் மீடியாவில் ஜார்ஜ் மரியன் நெப்போலியன் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்த காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் அம்பலமாக்கி விட்டனர்.

மேலும், இடைவேளை காட்சியில் அர்ஜுன் எப்படி விஜய்யை கண்டு பிடிக்கிறார் என்கிற டிராயிங் சீன் ஒன்றை வைத்தும் லோகேஷ் கனகராஜ் விளையாடி இருக்கிறார்.

 

இதையும் படிங்க: கச்சேரியில் சிவாஜி பாடலை பாட மறுத்த டி.எம்.எஸ்! அதற்கு காரணம் அவருடைய கொள்கையாம் – என்னவா இருக்கும்?

பார்த்திபன் தான் லியோ தாஸ் என அர்ஜுன் கண்டு பிடிக்கும் காட்சியிலேயே இந்த படம் ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் தான் என்பது தெளிவாகி உள்ளது.

ஆரம்பத்திலேயே அந்த ஹைனாவுடன் விஜய் சண்டை போடும் சிஜி காட்சி ரசிகர்களுக்கு முதல் பத்து நிமிடங்கள் செம ட்ரீட்டாகவும், அதன் பின்னர் குடும்ப காட்சிகளுடன், கொஞ்சம் ஸ்லோவாக கதாபாத்திரங்களை பில்டப் செய்து விட்டு, இடைவேளையின் போது பார்த்திபன் லியோ தாஸாக மாறும் காட்சியெல்லாம் மரண மாஸாக லோகேஷ் உருவாக்கி உள்ளார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: BiggBossSeason7: ஆத்தி! அடுத்தடுத்த ரெண்டு ‘வைல்டு கார்டு எண்ட்ரி’ இவங்க தானா?… ‘சூடு’ பிடிக்கப்போகுது ஆட்டம்!

லியோ படத்துக்கு 5க்கு 4 மதிப்பெண்கள், 3.5 ரேட்டிங் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில், விஜய் ஹேட்டர்கள் போலியான விமர்சனங்களையும், நெகட்டிவ் விமர்சனங்களையும் பரப்ப வழக்கம் போல ஆரம்பித்துள்ளனர்.

 

எப்படி இருந்தாலும், விஜய்யின் லியோ திரைப்படம் நடிகர் விஜய்க்கு இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட்டை கொடுக்கும் என்றும் உலகம் முழுவதும் ஏற்கனவே தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல்லாகி பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கே டிக்கெட் கிடைக்காத நிலை உருவாகி இருப்பதாக கூறுகின்றனர்.

Published by
Saranya M