ஏழெட்டு இடத்துல தையலு! இதுல எதுக்கு உனக்கு ஸ்டைலு – தல பற்றி ரத்னகுமார் போட்ட பதிவால் ரஜினி171க்கு வந்த சிக்கல்

Published on: October 17, 2023
rajini
---Advertisement---

Rathnakumar vs Ajith: லோகேஷ் இயக்கத்தில் நாளை மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது லியோ திரைப்படம். இந்த படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்திருக்கின்றனர். கூடவே அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் போன்ற நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.

நாளை மறுநாள் வெளியாகும் லியோ திரைப்படத்திற்கு அனைவர் மத்தியிலும் ஒரு பரபரப்பு இருந்து வருகிறது. ஒரு பக்கம் எந்த அசாம்பாவிதமும் நடைபெறக் கூடாது என வேண்டிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ரஜினிக்கும் விஜய்க்கும் இடையில் ஒரு சைலண்டான பனிப்போரே இருப்பது போல அவர்கள் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டிரெஸ் வாங்க போய் பாதி கடையை அள்ளி போட்ட எதிர்நீச்சல் கரிகாலன்: வைரலாகும் ஷாப்பிங் வீடியோ

அதனால் பலத்த பாதுகாப்புடனேயே  லியோ படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் அடுத்ததாக ரஜினியுடன் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். ஆனால் அஜித் ரசிகர்கள் ரஜினி171  படத்தில் லியோ படத்தில் ரைட்டராக பணிபுரிந்த ரத்னகுமார் வேலை செய்யக் கூடாது என கோஷமிட்டு வருகின்றார்களாம்.

காரணம் ரத்தினக்குமார் விஜயோட தீவிர ரசிகராம். பள்ளிபடிப்பில் இருந்து இன்று வரை ஒரு விஜயின் தீவிர ரசிகராக இருந்து வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் அஜித்தை பற்றி தாக்கி முன்பு தனது ட்விட்டர் பக்கத்திலும் கிண்டலடித்து  விமர்சித்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: லியோ படத்துக்கு 4 மணி காட்சியா? ஒருவழியாக நீதிமன்றமும் தீர்ப்பு சொல்லியாச்சி..!

அதாவது தல பைக் ஓட்டுறதால மாஸ்.. அவர எல்லாரும் ஓட்டுறதால அவரு தமாஸு என்றும் ஏழெட்டு இடத்துல தையலு! இதுல எதுக்கு உனக்கு ஸ்டைலு என்றும் என்னடா இது தலயோட கத்தி ரொம்ப சின்னதா இருக்கு? ஒரு வேளை அடுத்த போஸ்டர்ல நெய்ல் கட்டரோட நிப்பார் போல என்றும் கிண்டலடித்து பதிவிட்டிருக்கிறார்.

இதை பற்றி ரத்தினக்குமார் கூறும் போது ‘ நான் விஜய் ரசிகன், என் தம்பி அஜித் ரசிகன். எப்பொழுதுமே நான் ஒன்றை சப்போர்ட் பண்ணி போடுறது அது வேறு மாதிரி கிரியேட் ஆகிறது. விஸ்வாசம் படத்தை 4 முறை பார்த்தவன் நான். இன்று வரை என் குழந்தையின் பிறந்த நாளுக்கான வீடியோவை கண்ணானே கண்ணே பாடலை வைத்துதான் உருவாக்கிக் கொண்டு வருகிறேன். சொல்றவங்க சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்’ என்று ரத்தினக்குமார் கூறினார்.

இதையும் படிங்க: 10 படம் மட்டும் தான்… லோகேஷ் இந்த முடிவை எடுக்க இந்த பிரபலம் தான் காரணமா?!

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.