Connect with us

Cinema News

அதே கேக் ஊட்டுற சீன்!.. இதுவும் ஜெயிலர் காப்பியா.. லோகேஷ் கனகராஜுக்குள்ள இருந்து என்ன ப்ரோ அட்லீ வராரு!..

அனிருத்திடம் அந்த பக்கம் நெல்சன் கதை சொல்ல, இந்த பக்கம் அதே சிச்சுவேஷனுக்கு லோகேஷ் கனகராஜும் ட்யூன் வாங்கிய பாடல் தான் அன்பெனும் பாடலா என ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

ஜெயிலர் படத்தில் சாதுவாக இருக்கும் சூப்பர்ஸ்டார் தனது மகனை வில்லன் க்ரூப் கடத்தியதும் டைனோசராக மாறுகிறாரோ அதே போலத்தான் லியோ படத்திலும் குடும்பத்துக்காக சாதுவாக இருக்கும் விஜய் தனது குடும்பத்தை வில்லன் ஆட்கள் துரத்த மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பி வில்லன்களை காலி செய்து விட்டு தனது குடும்பத்துடன் இணைவார் என தெரிகிறது.

இதையும் படிங்க: அவன் நடிச்ச படமா ஓடுச்சு.. நான் தான் ஹிட் மெஷின்.. ஹீரோவை விட அதிகமாக சம்பளம் கேட்கும் வில்லன்?

ஜெயிலர் படத்திலும் ரஜினிக்கு அதிரடியான ஓபனிங் சாங் வைக்கவில்லை. அதே பாணியை லோகேஷ் கனகராஜும் விஜய்க்கு லியோ படத்தில் வைத்துள்ளார். மேலும், ரத்தமாரே பாடல் ஓபனிங் பாடலாக ஜெயிலர் படத்தில் இருந்ததை போல லியோவில் அன்பெனும் பாடல் இடம்பெற்றிருக்கும் என்கின்றனர்.

இந்நிலையில், பாடல் காட்சியில் ஜெயிலர் படத்தில் எப்படி ரஜினி ரம்யா கிருஷ்ணனுக்கு கேக் ஊட்ட, ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு கேக் ஊட்டும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததோ அதே போல விஜய் த்ரிஷாவுக்கு கேக் ஊட்ட, த்ரிஷா விஜய்க்கு கேக் ஊட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: ப்பா.. என்னவொரு ஃபீல் குட் பாட்டு!.. விஜய்யையும் த்ரிஷாவையும் இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு!..

இதை பார்த்த ரசிகர்கள் இவரு லோகேஷ் கனகராஜ் தானா இல்லை உள்ளே அட்லீ ஆவி ஓடுதான்னு கிண்டல் செய்து வருகின்றனர்.

குடும்பத்தை ஜாலியாக காட்டும் போது கேக் சீன் தானே பாஸ் எல்லாரும் வைப்பாங்க என விஜய் ரசிகர்கள் தற்போது ரஜினி ரசிகர்களின் ட்ரோல்களில் இருந்து தப்பிக்க சப்பைக் கட்டு கட்டி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top