மக்கள் நாயகனின் 'சாமானியன்' இதைத்தான் சொல்லுது!.. படம் பார்த்து விட்டு லியோனி கொடுத்த பேட்டி

 
சாமானியன் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பிரிமியர் ஷோ பார்த்த லியோனி படம் குறித்து என்ன சொல்கிறார்னு பார்ப்போம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த சாமானியன் இன்று வெளியாகி உள்ளது. ராமராஜன் இளையராஜா கூட்டணி என்றாலே படம் களைகட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தக் கூட்டணி சேர்ந்துள்ளது. பொதுவாக ராமராஜனின் பாடல்கள் என்றாலே அது ஒரு ரம்மியமாக இருக்கும். இந்தப் படம் எப்போ ரிலீஸாகும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்த ராமராஜனுக்கு இந்தப் படம் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. இதையும் படிங்க... ஒருநாள் இது நடக்கும்!.. ஏ.வி.எம் சரவணனிடம் சவால் விட்ட நாகேஷ்!.. அட அது அப்படியே நடந்துச்சே!…. இந்த நிலையில் படத்தின் பிரிமியர் ஷோவை நேற்று பார்த்த பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், நடுவருமான திண்டுக்கல் லியோனி இப்படி சொல்கிறார். ராமராஜன் படம்னாலே அதுல ஒரு கிராமிய காதல் இருக்கும். அது மட்டுமில்லாம இளையராஜாவின் இசை இருக்கும். இந்தப் படத்துல தலைப்புக்குத் தகுந்தாற்போல ராமராஜன் சாமானியனாகவே வருகிறார். இந்த உலகத்துல சாதாரண சாமானிய மக்களை யாருக்குமே தெரியாது. ஆனா அவங்க தான் இந்த உலகத்தையே ஆட்சி செய்றாங்க. இந்தக் கதைக்கருவை மையமாக வைத்து தான் படத்தை எடுத்திருக்காங்க. மிகப்பெரிய ஒரு சமுதாய சிந்தனையை இந்தப் படம் உண்டாக்கும். இந்தப் படத்துல நீங்க ஒரு புது ராமராஜனைப் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். ராமராஜனோட ரசிகர் நான் என்றும் ஒருமுறை லியோனி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் படிங்க... ‘சாமானியன்’ படத்தில் இளையராஜா வச்ச ட்விஸ்ட்! போடு.. இதுக்காகவே படம் ஹவுஸ்ஃபுல்தான் அதே போல இந்தப் படத்தை பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பார்த்துள்ளார். அவர் ரொம்ப நாள் கழித்து இந்தப் படத்துல பழைய ராமராஜனைப் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். முக்கியமாக சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படம் இது என்கிறார். அதே போல ராமராஜனின் மகளா நடிச்ச நஷாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னும் ஆரூடம் சொல்லியிருக்கார்.
sankaran v
sankaran v

3117 Articles

Sankaran is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and old cinema storiees

From Around the web