இந்த வார ஓடிடி ரிலீஸில் எதெல்லாம் தேறும்!.. ரசிகர்கள் சொல்வது இதுதான்!…

Published On: March 24, 2025
| Posted By : சிவா
ott

OTT Release: முன்பெல்லாம் திரைப்படங்களை தியேட்டரில் மட்டுமே ரசிகர்கள் பார்த்தார்கள். அடுத்து தொலைக்காட்சி சேனல்களில் பார்த்தார்கள். கடந்த சில வருடங்களாக அமேசன், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் வந்துவிட்டது. தியேட்டரில் வெளியான புதிய படங்கள் 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும். சில சமயம் புதிய படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரிடையாக ஓடிடி தளங்களில் வெளியாகும். இதை பிரீமியர் என சொல்கிறார்கள். அதேபோல், ஓடிடி தளங்களுக்கென்றே வெப் சீரியஸ்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. ஆங்கிலம், மலையாள திரைப்படங்கள் மற்றும் ஹிந்தி வெப் சீரியஸ்களும் கூட தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அந்தவகையில் கடந்த 21ம் தேதி ஓடிடியில் வெளியான படங்களில் எதுவெல்லாம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என பார்ப்போம்.

dragon
dragon

தமிழை பொறுத்தவரை பிரதீப் ரங்கநாதன் நடித்து தியேட்டரில் ஹிட் அடித்த டிராகன் படம் ஓடி நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. தியேட்டரில் 150 கோடி வசூலை பெற்ற டிராகன் படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் சிறப்பாக இருப்பதாக ஓடிடியில் பார்த்தவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அடுத்து தனுஷின் இயக்கத்தில் அவரின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களின் ட்ரோலில் சிக்கியிருக்கிறது. பவிஷ் மற்றும் அனிகாவின் அமெச்சூர் நடிப்பு மற்றும் கிரின்ச் காட்சிகளால் இப்படம் யாருக்கும் பிடிக்கவில்லை. ஓடிடியில் படம் வெளியானது முதலே பலரும் இப்படத்தை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

kingston
#image_title

ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் படம் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது. தியேட்டரில் வரவேற்பு பெறாத இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவரவில்லை. மலையாளத்தில் குஞ்சாகோ போபன் நடித்துள்ள Officer On Duty என்கிற இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் தியேட்டரிலேயே வெற்றி பெற்ற நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

officer on duty
#image_title

சத்யராஜ் நடிப்பில் உருவான பேபி அண்ட் பேபி படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த படம் பற்றி யாருமே பேசவில்லை. கொரியன் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகி நெட்பிளிக்ஸில் வெளிவந்துள்ள Revelations படம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. அதேபோல், கிரைம் திரில்லர் வெப் சீரியஸாக உருவாகி நெட்பிளிக்ஸில் வெளிவந்துள்ள Adolescence படமும் ஹிட் அடித்திருக்கிறது. இந்த வெப் தொடரில் 4 எபிசோட்கள் இடம் பெற்றிருக்கிறது.

twitt
#image_title