வாய்ப்பு தேடி போன ஸ்ரீதருக்கு ‘நோ’ சொன்ன பிரபலம்… ஆனா வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு அவருக்கு தெரியல!!.. அப்படி என்ன நடந்தது??

by Arun Prasad |   ( Updated:2022-11-27 05:02:53  )
CV Sridhar
X

CV Sridhar

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான ஸ்ரீதர், காலம் போற்றும் பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியுள்ளார். “வெண்ணிற ஆடை”, “காதலிக்க நேரமில்லை”, “ஊட்டி வரை உறவு” போன்ற பல திரைப்படங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.

CV Sridhar

CV Sridhar

வாழ்க்கை ஒரு வட்டம் என்று ஒரு திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஸ்ரீதரின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

வாய்ப்பு தேடிப் போன ஸ்ரீதர்

இயக்குனர் ஸ்ரீதர் சினிமாவிற்குள் வருவதற்கு முன் கதாசிரியராக ஆக வேண்டும் என விரும்பினார். யாராவது ஒரு பிரபல கதாசிரியரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய வேண்டும் என்று வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: தான் இயற்றிய சட்டத்தால் தனக்கு தானே மண் அள்ளி போட்டுக்கொண்ட வாரிசு தயாரிப்பாளர்… கர்மா இஸ் பூமராங்க்!!

CV Sridhar

CV Sridhar

அந்த காலகட்டத்தில் டி.கே.சண்முகம் என்பவர் ஒரு பிரபலமான நாடகக் குழுவை நடத்தி வந்தார். அந்த நாடகக் குழுவில் சோமசுந்தரம் என்பவர் கதாசிரியராக பணியாற்றி வந்தார். அந்த நாடக குழுவில் பல நாடகங்களை எழுதியவர் அவர்தான்.

இந்த நிலையில் கதாசிரியர் சோமசுந்தரத்திடம் எப்படியாவது உதவியாளராக சேர வேண்டும் என ஸ்ரீதர் விருப்பப்பட்டார். பல முறை அவரிடம் உதவியாளராக சேர முயற்சி செய்த ஸ்ரீதருக்கு பலன் கிட்டவில்லை. என்ன காரணத்தினாலோ சோமசுந்தரம் ஸ்ரீதரை உதவியாளராக சேர்த்துக்கொள்ளவில்லை.

வாழ்க்கை ஒரு வட்டம்

இச்சம்பவம் நடந்து பல வருடங்களுக்கு பிறகு ஸ்ரீதர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதிக்கொண்டிருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரைப்படங்கள் பலவற்றிலும் வசனகர்த்தாவாகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார் ஸ்ரீதர்.

அப்போது அவருக்கு உதவியாளராக பணியாற்றியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் பின்னாளில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இயக்குனராக அறியப்பட்டார். அவரை தொடர்ந்து தேவராஜ் என்பவர் ஸ்ரீதருக்கு உதவியாளராக பணியாற்றினார்.

CV Sridhar

CV Sridhar

இவர் பின்னாளில் “அன்னக்கிளி”, “கவிக்குயில்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். இந்த தேவராஜ் என்பவர் யாரென்றால், ஸ்ரீதரை உதவியாளராக சேர்த்துக்கொள்ள மறுத்த சோமசுந்தரத்தின் மகன்.

ஸ்ரீதர் மிகவும் புகழ் பெற்ற திரைக்கதை ஆசிரியராக வளர்ந்த பின்னால் சோமசுந்தரம், தனது மகனான தேவராஜ்ஜை உதவியாளராக சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஸ்ரீதரிடம் கேட்டாராம். அதற்கு ஸ்ரீதர் எந்த மறுப்பும் காட்டாமல் சரி என்று ஒப்புக்கொண்டாராம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது எவ்வளவு சரியான வார்த்தை.

Next Story