×

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த படத்தில் பேபி சாரா ...!

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படம் பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிக்கும் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதனாலே சினிமா பிரியர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 

கல்கி நாவலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அதில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் காட்சிகளைப் படமாக்கினார் மணிரத்னம். தாய்லந்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவித்ததால் படத்தில் வேலைகள் தொடரமுடியவைல்லை.

இதையடுத்து தேதி குறிப்பிடாமல் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் தெய்வத்திருமகள் புகழ் பேபி சாரா இணைந்திருப்பதாக பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News