×

தாமதமாக ஆரம்பித்தாலும் தரமானதாக இருக்கும் -  பிக்பாஸ் சீசன் 4 குறித்த தகவல்!

தமிழ்நாட்டு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனி முத்திரைப் பதித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதற்குக் காரணம் அதைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்தான். அதனால் மற்ற மொழிகளில் ஒவ்வொரு சீசனுக்கும் வேறு வேறு பிரபலங்கள் தொகுத்து வழங்கினாலும் தமிழில் கடந்த மூன்று சீசன்களாக கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் குறித்த தேதியில் துவங்கமுடியாமல் தாமதமாவதால் பிக்பாஸ்சீசன் 4 ஐ கமல் தொகுத்தளிக்க மாட்டார் என வதந்திகள் பரவியது. இது குறித்து விளக்கமளித்துள்ள நெருங்கிய வட்டாரம், இப்பொழுது தான் கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டு சீரியல் ஷூட்டிங் நடத்துவதற்கான அனுமதி வழங்கியுள்ளனர்.

எனவே கூடிய விரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான திட்டம் போட்டு வேலைகள் துவங்கும் என கூறுகின்றனர். மேலும். சற்று தாமதமாக இதற்கான வேலைகள் ஆரம்பித்தாலும் தமிழில் பிக்பாஸ் என்றாலே எப்பவும் கமல் மட்டும் தான் தொகுத்து வழங்குவார் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News