×

தாறுமாறாக வந்திறங்கிய லாஸ்லியாவின்  "பிரண்ட்ஷிப்" பர்ஸ்ட் லுக்!

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

 

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதுவும் முதல் படத்திலே பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக . "பிரண்ட்ஷிப்"  என்ற படத்தில் நடித்துள்ளார். ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கும் இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார். இந்நிலையில் "பிரண்ட்ஷிப்"  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியுள்ளது.

அர்ஜுன், லாஸ்லியா, ஹர்பஜன் சிங் மூவரும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளதால்  இவர்களுடைய கதாபாத்திரம் யூகிக்கமுடிகிறது, அர்ஜுன் ஸ்டைலிஷான வில்லன் போல் தோற்றமளிக்கிறார்.  வெளியான சில நொடிகளிலேயே இந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாக துவங்கியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News