×

அன்பான நண்பனை இழந்து நிற்கிறேன்... நடிகர் சாந்தனு கண்ணீர் பதிவு!

நடிகர் சாந்தனு தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் மரணத்தால் மனம் உடைந்து இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு பொன்றை போட்டுள்ளார்.

 

"கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமான பலரை இழந்து வருகிறோம். நானும் சமீபத்தில் ஒரு அன்பான நண்பனை இழந்தேன், ஒரு சக ஊழியர், அவர் இளமையாக, ஆரோக்கியமாக இருந்தார்.பிறகு இது ஏன் நடக்கிறது? இதற்கெல்லாம் கீழ் ஒரே ஒரு விஷயம் தான், மன அழுத்தம்... வாழ்க்கையை பற்றிய சிந்தனையில் நாம் அதிக மனஅழுத்தத்தை எடுத்துக்கொள்கிறோம். அதுவே ஒரு கட்டத்தில் நம் வாழ்க்கையை முடித்துவிடுகிறது.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல விஷயங்களைப் பற்றிய பிரச்சனை நம் அனைவருக்கும் இருக்கிறது. அது ஒவ்வொன்றின் பிரச்சனையும் அவர்களுக்குப் பெரியது,  அது புரிந்துகொள்ளத்தக்கது ... ஆனால் உங்கள் வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு அல்ல! நாம் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்வோம் , நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வில் எதையாவது அடைய வேண்டுமெனில் மகிழ்ச்சியாக இருங்கள்.

மன அழுத்தம், வெறுப்பு, நெகட்டிவிட்டி என இது போன்ற  பல விஷயங்கள் இருக்கின்றன. அதனால் ஒரு ****** பிரயோஜனம் இல்லை. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. என்ன நடக்க வேண்டுமோ அது சரியான நேரத்தில் நடக்கும். இதை மிகுந்த அன்பு மற்றும் அக்கறையுடன் சொல்கிறேன். தயவுசெய்து எதையும் எளிதாக எடுத்துக் கொள்வோம். " என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News