×

ஒத்த வீடியோவில் மொத்த 90ஸ் கிட்ஸையும் அட்ராக்ட் செய்த ஷெரின்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொருமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின்.

 

துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மவுனமாகவே இருந்து வந்தார். தற்போது 90ஸ் காலகட்டத்தில் பிரபமான விளம்பரம் வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரத்திற்கு டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஷெரினின் டான்ஸ் 90ஸ் கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளதோடு சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News