×

அல்லு அர்ஜுன்  படத்துல நடிக்க மாட்டேன்னு ஸ்ட்ரிட்டா சொல்லிட்டேன் - விஜய் சேதுபதி

தெலுங்கில் அல்லு அர்ஜுன் அடுத்ததாக நடிக்கும் படம் " புஷ்பா". இப்படத்தை ரங்கஸ்தலம் வெற்றி இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஆந்திராவில் தமிழர்கள் செம்மரக்கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார்.

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தில் நடிகை ரோஜா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் சுமார் 5 வருடங்களுக்கு பின்னர் ரோஜா திரைத்துறைக்கு ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.  

இது தவிர நடிகர் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகியது. ஆனால், இப்படத்தில் இருந்து திடீரென விஜய்சேதுபதி விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, " கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிகர் அல்லு அர்ஜுன் கூட இப்படத்தில் நடிக்க முடியவில்லை.

என்ன ஆனாலும் பார்த்துக்கலாம் வாங்க என்று சொல்லி தான்  இயக்குனர் கூப்பிட்டார். ஆனாலும், நான் மறுத்துட்டேன். வாக்கு கொடுத்துட்டு போக முடியவில்லை என்றால் நல்லாயிருக்காது. வேலை செய்கிறோம் என்று சொல்லி சொதப்புறதுக்கு பதிலாக பேசமா தள்ளி நிக்கலாம் என்று தோன்றியது. `புஷ்பா’ கதை சூப்பராக இருந்தது. இந்த படத்துக்கு பெரிய இயக்குனர் சூப்பராக வேற. இதையெல்லாம் மிஸ் பண்ணது ரொம்ப வருத்தமாக இருக்கு என்று விஜய் சேதுபதி கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News