×

கடைசி படத்துல இப்படி எங்கள அழ வச்சுடீங்களே -  கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் 14ம் தேதி ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.

 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து  கடந்த ஜூலை 24ம் தேதி  டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான படம் “தில் பேச்சாரா".  அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படம் ஹாட் ஸ்டாரில் கட்டமின்றி பார்க்கலாம்.

இப்படத்தில் சுஷாந்த் ரஜினியின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். மேலும், ரஜினியை போல் ஒரு நல்ல நடிகராக ஆகவேண்டும் என்பது அவரது ஆசையாக உள்ளது. அதன் படி அவரது நண்பர் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் போன்று நடித்திருக்கிறார். சுஷாந்த் பயன்படுத்தும் செல்போன் மற்றும் சுவருக்குள் முழுக்க ரஜினி படத்தையே ஒட்டி வைத்துள்ளார். சுஷாந்த்  ரஜினியின் ரசிகனாக நடித்துள்ளது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே ரஜினி ரசிகர்கள் சுஷாந்த் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News