×

புருஷனுக்கு இந்த வாரம் முழுக்க கேரட் தான்  - சிரிப்பூட்டும் சமந்தா பதிவு!

நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரு தட்டு, கோகோபீட், விதைகள் மற்றும் குளிர்ச்சியான அறை மட்டும் கொண்டு சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வதறகான சூப்பர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் சமந்தா மொட்டை மாடியிலே வீட்டிற்கு தேவையான கீரை , காய்கறி , முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை கார்டனிங் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது கேரட் அறுவடை செய்த புகைப்படத்தை வெளியிட்டு " இந்த வாரம் முழுக்க கேரட் தான்: கேரட் அல்வா , கேரட் , ஜூஸ் ,கேரட் பச்சிடி , கேரட் சமோஸா , கேரட் இட்லி என பெரிய மெனு லிஸ்ட் வெளியிட்டுள்ளார். நாகசைதன்யா கேரட் சைதன்யா ஆகாமல் இருந்தால் சரி தான்.

From around the web

Trending Videos

Tamilnadu News