×

தாறுமாறு தக்காளி சோறு... விஜய்க்கு வெறித்தனமா வாழ்த்து சொன்ன பாண்டியம்மா!

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாம் முறையாக நடித்து வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்த படம் பிகில். இது பெண்களின் சுதந்திரத்தை பற்றிம் பெண் கால்பந்து வீராங்கனைகள் பற்றியும் எடுக்கப்பட்ட ஒரு படம். கால்பந்தாட்ட கோச்சராக விஜய் நடித்திருந்த இப்படத்தில் அவருடன் பல பெண் நடிகைகள் மற்றும் உண்மையான கால்பந்து வீராங்கனைகள் நடித்திருந்தனர்.

 

அதில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்தவர் தான் இந்திரஜா. காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளான இவர் பாண்டியம்மா என்ற ரோலில் நடித்து செம பேமஸ் ஆகிவிட்டார். இப்படத்தின் ஒரு காட்சியில் பெண்கள் அணியினர் சரியாக விளையாடததால் அவர்களை விஜய் திட்டுவது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் பாண்டியம்மா இந்திரஜாவை விஜய் குண்டம்மா.... குண்டம்மா என திட்டுவார் விஜய். இதனாலே படத்தில் நடித்த மற்ற பெண்களை விட இந்திரஜா பெரிய அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தளபதி விஜய் நேற்று தனது 46 வது பிறந்த நாளை கொண்டினார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் வித்தியாமான முறையில் வாழ்த்து கூறினார்.  அந்தவகையில் இந்திரஜா தனது அப்பா ரோபோ ஷங்கருடன் இணைந்து 'யூத்' படத்தின் 'ஆல்தோட்டா பூபதி' பாடலுக்கு லுங்கி கட்டிக்கொண்டு வெறித்தனமாக நடனமாடி விஜய்க்கு டெடிகேட் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News