எல்ஐகே படம் முதலில் நடிக்க வேண்டியது அந்த ஹிட் நடிகரா? லைகாவால் நடந்த மாற்றம்…
Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐகே திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த விவரங்களை தன்னுடைய பேட்டி ஒன்றில் வெளியிட்டு இருக்கிறார்.
சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்த போடா போடி திரைப்படத்தில் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்., முதல் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்குறதுல இருக்கிற பிரஷர்?.. என்ன பில்லா பட இயக்குனர் இப்படி சொல்லிட்டாரு!..
தொடர்ந்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கினார். அப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய ரீச்சை கோலிவுட்டில் பெற்று கொடுத்தது. தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கி சிறந்த இயக்குனர் விருதையும் பெற்றார்.
காமெடி கலந்த காதல் கதைகளுக்கு பெயர் போனவர் விக்னேஷ் சிவன். தற்போது பிரதீப் ரங்க நாதனை வைத்து எல்ஐகே திரைப்படத்தை இயக்கி வருகிறார். முதலில் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்க இருந்தது விக்னேஷ் சிவன் தான். ஆனால் அவர் சில பல காரணங்களால் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையும் படிங்க: கர்மா வட்டியுடன் திரும்பி வரும்!.. நயனின் இன்ஸ்டா ஸ்டோரி!.. தனுஷ் மீது கோபம் தீரல போல!.
ஆனால் படம் எதிர்காலத்தில் நடக்க இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. இதற்காக மிகப்பெரிய அளவு பட்ஜெட் செலவாகும் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சினையாக இருந்தது. இதனால் ஏன் எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் நிகழ்காலத்திலே அதை எடுக்கலாமே என அவர்கள் தான் அறிவுரை வழங்கினர்.
வரலாற்று படமான பாகுபலி நிகழ்காலத்தில் எடுக்கலாம் என யாராவது சொன்னால் நம்மால் எடுக்க முடியுமா? அது போல தான் அந்த படத்தை அதற்கு மேல் என்னால் கொண்டு செல்ல முடியாமல் விலகினேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.