விஜயகாந்தை போல நவரச நாயகனுக்கும் அடித்த பெரிய ஜாக்பாட்! இத பத்தி யாராவது பேசுனீங்களா?

by Rohini |   ( Updated:2024-01-15 17:44:38  )
kar
X

kar

Actor Karthick: தமிழ் சினிமாவில் சிவாஜி - எம்ஜிஆர் இவர்களுக்கு பிறகு ரஜினி - கமல் இவர்கள்தான் மிகவும் புகழ் பெற்ற நடிகர்களாக இருந்தனர். இப்போது வரைக்கும் அவர்களின் படங்கள்தான் பாக்ஸ் ஆஃபிஸிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

80களில் ரஜினி - கமல் ஒரு பக்கம் உச்சத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அடுத்த படியாக மிகவும் புகழ்பெற்ற நடிகர்களாக இருந்தது பிரபு, கார்த்திக், சத்யராஜ் போன்றவர்கள்தான். ரஜினி , கமலை போன்று இவர்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.

இதையும் படிங்க: 58 வயசு நடிகருடன் ஜோடியா நடிக்க மகளை தயார்ப்படுத்தும் தேவயாணி குடும்பம்?.. கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!..

இந்த நிலையில் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் 100வது படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாவது மிகப்பெரிய சாதனையாக கொள்ளப்படுகிறது. அந்த வகையில் விஜயகாந்தை தவிர ரஜினி, கமலின் 100வது படம் தோல்வியையே சந்தித்திருக்கிறது.

ரஜினிக்கு 100 வது படம் ஸ்ரீராகவேந்திரா. ஆன்மீகத்தை அடிப்படையாக ரஜினியின் விருப்பத்தின் பேரிலேயே அந்த படம் தயாரிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை அந்தப் படம் பதிவு செய்யவில்லை. அதே போல் கமலின் 100வது படம் ராஜபார்வை. அவருக்கும் தோல்வியைத்தான் தந்தது.

இதையும் படிங்க: சூர்யாவுக்கு சூனியம் வைக்க பார்க்குறாரே சியான் விக்ரம்!.. கங்குவாவுக்கு காலனாக மாறும் தங்கலான்?..

ஆனால் விஜயகாந்திற்கு மட்டும்தான் அந்த வெற்றிக் கனி கிடைத்தது. அவரின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்தது. அதே போல் நடிகர் கார்த்திக்குக்கும் அவரின் 100வது படமாக அமைந்தது ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’. இந்தப் படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. 100வது படம் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே வெற்றி படமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் விஜயகாந்த் மற்றும் கார்த்திக் அந்த வெற்றியை ருசித்த நடிகர்களாக கருதப்படுகின்றனர்.

Next Story