" சிவகார்த்திகேயன் இடத்தில் விமல் தான் டாப் ஹீரோவாக வந்திருக்க வேண்டும்..." சொன்னது யாரு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஹிட் நாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் இடத்தில் விமல் தான் இருக்க வேண்டும் என பிரபல இயக்குனர் சொல்லி இருப்பது வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தமிழ்த் திரைப்பட நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து அவருக்கு மனம் கொத்தி பறவை படத்திலும் இவருக்கு நாயகனாக வாய்ப்பு கிடைத்தது. நல்ல வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்தாலும், பெரிய ரீச் கொடுக்கவில்லை.
இதை தொடர்ந்து, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் இணைந்து நடித்தார். இந்த படம் சிவா கேரியரில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது. தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் வந்தது. தற்போது இளம் நாயகர்களின் முக்கிய இடத்தினை சிவா பிடித்து இருக்கிறார். ஆனால் கேடி பில்லா கில்லாடி ரங்காவில் நடித்த விமலுக்கு நல்ல இடம் சினிமாவில் கிடைக்கவில்லை. விமலுக்கு வாய்ப்புகள் வந்தாலும் சிவா தொட்ட உயரத்தினை கூட அவரால் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், விமல் கதாநாயகனாக நடித்துள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு லிங்குசாமி பேசி இருந்தார். சிவகார்த்திகேயன் போன்று பெரிய இடத்துக்கு விமல் வந்திருக்க வேண்டும். ஆனால் சில தடங்களால் அவருக்கு அதில் கொஞ்சம் தடை ஏற்பட்டு விட்டது. இன்றைய காலக்கட்டத்தில் சின்ன படங்களுக்கே நல்ல ரீச் கிடைக்கிறது. அதுப்போல, இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் எனத் தெரிவித்து இருந்தார்.