நெருக்கடியில் சிக்கிதவிக்கும் லிங்குசாமி...! கைகொடுக்கும் முன்னனி தமிழ் நடிகர்கள்...
செக் மோசடி வழக்கில் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இயக்குனர் லிங்குசாமி தமிழில் ஒரு சில தோல்வி படங்களை கொடுத்தாலும் தன்னுடைய முதல் படத்தை காவியமாக தான் படைத்தார். மம்மூட்டி உட்பட பல நட்சத்திரங்களை ஒன்று திரட்டி ஆனந்தம் என்ற குடும்பபாங்கான படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனராக வலம் வந்தார்.
அதன் பின் மணிரத்னம் இயக்கத்தில் கடல் என்ற படத்தில் தமிழ் தியேட்டரிக்கல் உரிமையை பெற்று ரிலீஸ் செய்ய லிங்குசாமிக்கு ஏகப்பட்ட கோடிகள் நஷ்டம். ஆனால் உரிமையை விற்கும் போதே மணிரத்னம் அக்ரிமெண்ட் போட்டு தான் விற்றுள்ளார். நஷ்டம் ஏதும் வந்தால் நான் பொறுப்பில்லை என எழுதி வாங்க இவரும் வேறு வழியில்லாமல் மணிரத்னத்திடம் போய் நிற்க முடியவில்லை.
இதையும் படிங்கள் : நம்ம அட்லீ செஞ்ச வேலையால் அதிர்ந்து போன பாலிவுட்.! ஷாருக்கானுக்கு இப்போ வேற வழி இல்ல…
அதன் பின் அஞ்சான் படத்தை எடுத்து அதன் தமிழ் தியேட்டரிக்கல் உரிமையையும் இவரே பெற்று அதன் மூலம் 20 கோடி நஷ்டம். பின் கமலின் உத்தமவில்லன் படத்தை ஒரு ரசிகனாக எடுத்துள்ளார். அதில் முக்கால் வாசி கமலின் தலையீடு தான் இருந்திருக்கிறது. படமும் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. மேலும் இந்த சமயத்தில் சூர்யா, கார்த்தி, கமல் லிங்குசாமியிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என உத்திரவாதம் அளிக்க கார்த்தி நடிக்க ஒப்புக் கொண்டாரே என கார்த்தியை நம்பி ஒரு பைனான்சியரிடம் பெருந்தொகையை கடனாக பெற்றாராம் லிங்குசாமி. ஆனால் குறித்த நேரத்தில் கார்த்தி கால்ஷீட் கிடைக்காததால் அதன் விளைவாக தான் இந்த மோசடி வழக்கு பதிவாகியுள்ளதாம்.
இதையும் படிங்கள் : வடிவேலு வந்து எங்கிட்ட சினிமா சான்ஸ் கேட்கல…சொல்கிறார் ராஜ்கிரண்…அப்புறம் எப்படி படத்துல அறிமுகம்?
இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படம் இவருடையது தான். அந்த படம் மாபெரும் வெற்றி. அந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயனும் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என உத்திரவாதம் கொடுத்தாராம். ஆக லிங்குசாமி வெளியில் வந்ததும் சூர்யா, கார்த்தி, கமல், சிவகார்த்திகேயன் இவர்களில் யாராவது முதலில் நடிக்க முன்வந்தாலும் dலிங்குசாமி படத்தை இயக்காமல் வேறொரு இயக்குனரை வைத்து படத்தை தயாரித்தால் மட்டுமே தப்பிக்க முடியும். ஏனெனில் இப்ப உள்ள டிரெண்ட் மாறி விட்டது. பழசை வைச்சு தொங்கிகிட்டே இருந்தால் முடியாது. அதனால் இவர் பாதையை மாற்ற வேண்டும் என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.