Connect with us
lingusamy

Cinema News

கழட்டிவிட்ட பெரிய ஹீரோக்கள்!.. லிங்குசாமியின் பையா 2-வில் யார் ஹீரோ தெரியுமா?…

ஆனந்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. 4 சகோதரர்களிடையே இருக்கும் பாசப்பிணைப்பை வைத்து அழகாக கதை மற்றும் திரைக்கதை அமைத்திருந்தார். மம்முட்டி,முரளி, அப்பாஸ், தேவயாணி, சினேகா என பலரும் நடித்த இந்த படம் வெற்றி பெற்றது.

விக்ரமன் ஸ்டைலில் படமெடுக்கும் மேலும் ஒரு இயக்குனர் வந்துவிட்டார் என ரசிகர்கள் நினைத்தபோது மாதவனை வைத்து ரன் எனும் காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த ஒரு படத்தை இயக்கி ஆச்சர்யம் கொடுத்தார். அந்த படமும் வெற்றி. அதன்பின் அதுவே அவரின் ஸ்டைலாக மாறிப்போனது.

இதையும் படிங்க: லிங்குசாமியை கதறவச்ச அந்த ஒரு திரைப்படம்… ஒடஞ்சு போன மனுஷன் என்ன செஞ்சாரு தெரியுமா?…

தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களை இயக்கினார். இதில் விஷாலை வைத்து அவர் இயக்கிய சண்டக்கோழி படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேநேரம், லிங்குசாமியின் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த கடைசிப்படமாகவே சண்டக்கோழி அமைந்து. ஜீ, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களை இயக்கினார். இதில், பையா மட்டுமே வெற்றி பெற்றது.

மற்ற படங்கள் ஓடவில்லை. அதிலும் அஞ்சான் படமும், கமலை வைத்து அவர் தயாரித்த உத்தம வில்லன் படமும் அவருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது. பல கோடிகளுக்கு கடனாளி ஆகவும் மாறினார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று தி வாரியர் என்கிற படத்தை இயக்கினார். அந்த படமும் ஓடவில்லை.

இதையும் படிங்க: பாபா படம் ஃபிளாப்!.. ரஜினி கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன லிங்குசாமி!..

இப்போது, அவர் இயக்கத்தில் நடித்த எல்லா நடிகர்களும் அவரை கழட்டிவிட்டு விட்டனர். பெரிய ஹீரோக்கள் அவரின் இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை. எனவே, வெறுத்துப்போன லிங்குசாமி இப்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் என்பவரை வைத்து ‘பையா 2’ படத்தை இயக்கவுள்ளார். ஆகாஷ் ஏற்கனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

பையா படத்தில் கார்த்தி நடித்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்தில் கார்த்தி, ஆர்யா என பலரையும் நடிக்க வைக்க லிங்குசாமி முயற்சி எடுத்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. எனவேதான், அதர்வாவின் தம்பி ஆகாஷை வைத்து அப்படத்தை எடுக்க அவர் முடிவுசெய்துவிட்டார் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் நடிச்சிருந்தா அந்த படம் ஓடியிருக்காது!.. பல வருடம் கழித்து லிங்குசாமி சொன்ன ரகசியம்…

google news
Continue Reading

More in Cinema News

To Top