கமல் படத்தால எனக்கு ரஜினி படம் போச்சி!.. புலம்பும் லிங்குசாமி

#image_title
Rajini kamal: 80களில் துவங்கிய ரஜினி, கமல் போட்டி 45 வருடங்கள் கடந்தும் இன்னமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இப்போதும் ரஜினிக்கு போட்டி கமல் மட்டுமே. கமலுக்கு போட்டி ரஜினி மட்டுமே. விஸ்வரூபம் 2-வுக்கு பின் 4 வருடங்கள் கமல் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதோடு, பிக்பாஸ், அரசியல் கட்சி துவங்கி கட்சிக்கான வேலைகள் என பிஸியாகி விட்டார். எனவே, கமல் அவ்வளவுதான் என எல்லோரும் முடிவெடுத்தனர்.
ஆனால், லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து விக்ரம் படத்தை கொடுத்தார் கமல். இந்த படம் மூலம் கமல் கம்பேக் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் 500 கோடியை தாண்டி வசூல் செய்தது. ரஜினிக்கு ஒரு பழக்கம் உண்டு.
கமல் என்ன செய்கிறார்? அவரின் படம் எப்படி ஓடுகிறது? என்பதை கவனித்துக்கொண்டே இருப்பார். கமல் ஒரு ஹிட் கொடுத்தால் உடனே தானும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுவார். இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தாலும் சினிமாவில் போட்டி என்பது இருந்து கொண்டேதான் இருக்கிறது.
ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடிப்பதாக ஒரு படம் பேசப்பட்டது. ஆனால், என்ன நினைத்தாரோ ரஜினி கடைசி நேரத்தில் பின் வாங்கிவிட்டார். அதன்பின் லோகேஷும், கமலும் இணைந்து உருவாக்கப்பட்ட படம்தான் விக்ரம். இப்போது லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினி.
இந்நிலையில்தான் இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி பேட்டி ஒன்றில் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார். உத்தமன வில்லன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நேரம் ரஜினி சாரை வைத்து ஒரு படம் தயாரிக்க ஆசைப்பட்டேன். லிங்கா தோல்வி அடைந்த நேரம் அது. ரஜினி - தனுஷ் காம்பினேஷன், இயக்குனர் முருகதாஸ் என முடிவு செய்தோம். ஆனால், ‘தனுஷ் காம்பினேஷ் வேண்டாம். நாம தனியாவே களம் இறங்குவோம்’ என ரஜினி சொல்ல எனக்கு செம ஹேப்பி.
முருகதாஸை வர சொல்லி கதை ரெடி பண்ண சொன்னா ‘என்கிட்ட இப்ப கதை இல்லை’ன்னு சொல்லிட்டான். ‘எதாவது ஒரு லைனை புடி.. ரஜினி சார் ஓகே சொல்லிட்டார்’னு அவன்கிட்ட சொன்னேன். ஆனால், உத்தம வில்லன் படம் தோல்வி அடைந்ததால் ரஜினி படம் டிராப் ஆகிவிட்டது’ என சொல்லியிருக்கிறார். கமல் நடிப்பில் உருவான உத்தம வில்லன் படத்தை லிங்குசாமி தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.