Connect with us

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களையே ஓரங்கட்டிய வில்லிகள் லிஸ்ட்!!…

Cinema History

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களையே ஓரங்கட்டிய வில்லிகள் லிஸ்ட்!!…

அரிதிலும் அரிதாக தான் முன்னணி நடிகைகள் வில்லியாக நடித்துள்ளனர், அந்த திரைப்படங்களும் திரையில் வெற்றி பெற்றுள்ளது . அவ்வப்போது, தமிழ்த் திரையுலகை வில்லிகள் கலக்கியிருக்கின்றனர்…

ஷ்ரேயா ரெட்டி:

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் திமிரு. இந்த படத்தில் மாஸான வில்லியாக நடித்து மிரட்டியவர் ஷ்ரேயா ரெட்டி.

இவர் விஷாலின் சகோதரரும் நடிகருமான விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தி கொண்ட ஸ்ரேயா ரெட்டி ஜிம், குழந்தை பராமரிப்பு என பிஸியாக இருந்து வருகிறார்.

சமந்தா :

10 எண்றதுக்குள்ள படத்தில் சமந்தா அழகான நாயகிதான். ஆனால் அவரை இந்த அளவு மோசமாக வேறு எந்தப் படத்திலும் பார்த்ததில்லை. இதில் இரட்டை வேடங்கள் வேறு!

இரு வேடங்களில் ஒன்று அழகான கதாநாயகி,மற்றோன்று சிறப்பான வில்லி கதாப் பாத்திரம்.

தமன்னா :

தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் தமன்னா அறிமுகமானார்.முதல் படத்திலேயே வில்லி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவரின் சிறந்த நடிப்பு தான் அடுத்தடுத்த பட வாய்ப்புக்கு காரணமாக அமைந்தது.இன்று சிறந்த ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

த்ரிஷா :

கொடி எனும் தமிழ் அரசியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா நடித்துள்ளனர்.இதில் நடிகர் தனுஷ்க்கு இரட்டை வேடம்.

இந்த படத்தில் த்ரிஷா நல்ல அரசியல் வில்லியாக தன் தனித்திறமையை நிரூபித்துள்ளார்.

ஜோதிகா :

கௌதம் மேனன் இயக்கத்தில்,பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வில்லி கேரக்டரில் அசத்தியிருப்பார்.

ஜோதிகா திருமணத்திற்குப்பின் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது

ரீமா சென் :

தமிழில் மின்னலே படத்தின் மூலமாக அறிமுகமானார்.செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென் வில்லியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரீமா சென் நடிப்பிற்கு சிறந்த மையில் கல்லாக அமைந்தது.

ரீமா சென் 2012இல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

வரலட்சுமி :

இயக்குனர் லிங்குசாமி – விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சண்டக்கோழி 2. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வில்லியாக வரலட்சுமி அட்டகாசமாக நடித்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top