பாக்க அப்படியே இருக்காங்களே… உங்களுக்கும் அப்படி தான் தோணிச்சா..! ஒரே மாதிரி இருக்கும் தமிழ் நடிகைகள்..!
Kollywood Actress: தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகைகளில் ஒரு சிலர் பார்க்க ட்வின்ஸ் மாதிரி இருப்பார்கள். நமக்கே இவர்கள் ஒருவரும் ஒன்னு தானா? இல்ல வேறு ஆளா? இரண்டு பேரும் சகோதரிகளா என சந்தேகம் தருவார்கள். அந்த அளவுக்கு அச்சு அசலாக இருக்கும் நாயகிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
திவ்யா ஸ்பந்தனா - ரம்யா நம்பீசன்: குத்து திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த திவ்யா ஸ்பந்தனாவும், சேதுபதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசனும் பார்க்க ஒரே மாதிரியாகவே இருக்கின்றனர். உங்களுக்கும் தோணி இருக்கா!
சிந்து மேனன்-நந்திதா ஸ்வேதா: ஈரம் திரைப்படத்தில் நடித்த சிந்து மேனன், முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்த நந்திதா ஸ்வேதாவும் ஒரே மாதிரியாக தான் இருக்கின்றனர்.
நஸ்ரியா-வர்ஷா: தமிழில் நிறைய படங்களில் நடித்து ஹிட்டான நஸ்ரியாவும், பிகில் திரைப்படத்தில் திருமணம் ஆன பெண்ணாக நடித்த வர்ஷாவும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள்.
சமந்தா - ஐஷு ரெட்டி: தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் ஹிட் நாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவரும் தெலுங்கு திரை உலகில் நடித்து வரும் ஐஷு ரெட்டியும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதாக சோஷியல் மீடியாவில் அனைவரும் பேசி வருகின்றனர்.
அசின் - பூர்ணா: கோலிவுட்டில் ஹிட் நாயகியாக இருந்த அசினும், சில படங்களில் நடித்து இருந்த பூர்ணாவும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தனர். இதனால் பூர்ணாவிற்கு சின்ன அசின் என செல்ல பெயரே கோலிவுட்டில் உண்டு.