படமோ அட்டர் பிளாப்!.. ஆனா வச்சாங்க பாருங்க சக்சஸ் மீட்!.. உலக மகா நடிப்புடா சாமி!...

by prabhanjani |   ( Updated:2023-07-25 00:10:37  )
vjs nakul
X

படம் அட்டர் ஃபிளாப் ஆனாலும் கூட, எந்த கவலையும் இல்லாமல், அந்த தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் வெற்றி விழா கொண்டாடுவது தமிழ் சினிமாவில் இப்போது ட்ரெண்டாகி விட்டது. படம் வந்ததே பலருக்கு தெரியாது. அந்த படம் பார்த்த சிலரும் கூட கடுப்பாகி புலம்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால் படக்குழுவினர் கேக் வெட்டி, வெற்றி விழா கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். இதை பார்த்து ரசிகர்கள் மேலும் கடுப்பாவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் படுதோல்வி அடைந்தாலும், வெற்றி விழா கொண்டாடப்பட்ட படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

naai sekar vadivelu

வடிவேலுவிற்கு கம் பேக்காக இருக்கும் என்று சொல்லி எடுக்கப்பட்ட படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படம் காட்டு மொக்கையாக இருந்ததாக பலர் கதறிகொண்டிருந்த நேரத்தில் படக்குழுவினர் மனசாட்சியே இல்லாமல் ஜோராக வெற்றி விழா கொண்டாடினார்கள்.

கந்தசாமி

kandasamy

விக்ரம், ஸ்ரேயா நடிப்பில் வெளியான கந்தசாமி படத்திற்கு, ஆரம்பத்தில் இருந்தே ஆகா, ஓஹோ என எதிர் பார்ப்பை ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் படம் வெளியானதும் படம் மிக மிக சுமாராக தான் இருக்கிறது என்று படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த படமும் சரியாக ஓடவில்லை. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், படக்குழுவினர் விமர்சையாக வெற்றி விழா கொண்டாடினார்கள்.

குருவி

kuruvi

விஜய், த்ரிஷா, விவேக் ஆகியோர் நடிப்பில் வெளியான குருவி திரைப்படம், சரியாக ஓடவில்லை. விஜயின் மற்ற படங்களோடு ஒப்பிட்டால் இது தோல்வி படம் தான். ஆனாலும் படக்குழுவினர் 100வது நாள் வெற்றிக் கொண்டாட்டம், 150வது நாள் வெற்றி விழா என கொண்டாடி வந்தனர்.

பிரம்மா.காம்

nakul

இப்படி ஒரு படம் வந்ததா என்று நீங்கள் நினைக்கலாம். ஆம் வந்தது. நகுல், பாக்கியராஜ், ஜெகன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பிரம்மா.காம். இந்த படத்திற்கும் படக்குழுவினபர் கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடினார்கள்.

டிஎஸ்பி

dsp

பொதுவாகவே படம் வெளியாகி 3 நாட்களுக்கு பிறகு தான் வெற்றி என்று படக்குழுவினர் கூற தொடங்குவார்கள். இந்த படத்திற்கு தான் மனச்சாட்சியே இல்லாமல் படம் வெளியான அடுத்த நாளே விஜய் சேதுபதி, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்டோர் கேக் வெட்டி மாத்தி மாத்தி மாலை போட்டு படத்தின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் விஜய் சேதுபதி நடித்ததிலேயே மிக மோசமான படம் இதுவாக தான் இருக்கும் என்று படம் பார்த்த ரசிகர்கள் கதறிக் கொண்டிருந்தனர்.

Next Story