Cinema News
பண்டிகைகளுக்கு ராஜா போட்ட மறக்க முடியாத பாடல்கள்!.. பல வருஷமாகியும் இப்பவும் ஹிட்டுதான்!…
இசைஞானி இளையராஜா எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ற பாடல்களை நமக்கு கொடுத்துள்ளார். மகிழ்ச்சியாக இருந்தால், சோகமாக இருந்தால், காதலித்தால், காதல் தோல்வியானால் என எல்லா மனநிலைகளிலும் கேட்பதற்கு எக்கச்சக்கமான பாடல்களை போட்டுள்ளார். அதை நாமும் இன்று வரை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம். ஆதே போல அவர் கிட்டத்தட்ட எல்லா பண்டிகைகளுக்கும் பாடல்களை போட்டுள்ளார். இளையராஜாவின் பண்டிகை பாடல்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொங்கல்
மகாநதி படத்தில் வரக்கூடிய ‘தை பொங்கலும் வந்தது.. பாலும் வந்தது.. பாட்டு சொல்லடி யோ..’ பாடலை எல்லா பொங்கல் பண்டிகைக்கும் நாம் டிவில் அல்லது ரேடியோவில் கேட்டு ரசித்திருப்போம். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்க்கு கூட இன்று வரை இந்த பாடலை தான் பலர் வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
புத்தாண்டு
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த பாடலை கேட்டு தான் புத்தாண்டை தொடங்குவார்கள். சகலகலா வல்லவன் படத்தில் வரும் ‘இளமை இதோ இதோ’ பாடலில், கமல்ஹாசன் பைக்கில் வந்து ‘ஹாய் எவ்ரிபடி. விஷ் யூ எ.. ஹேப்பி நியூ இயர்’ என்று பாடினால் தானே அது புத்தாண்டு. டிவியில் கவுண்ட் டவுன் போட்டு முடித்து இந்த பாடலை பார்த்த பிறகு புத்தாண்டை தொடங்குவதே ஒரு தனி பீல் தான்.
கார்த்திகை தீபம்
தேவதை படத்தில் வரும் ‘தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்’ பாடலை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கார்த்திகை தீபம் பண்டிகையை கூட விட்டு வைக்காமல் அதற்கும் ஒரு பாட்டு போட்டிருக்கிறார் இளையராஜா.
போகி
போகி பண்டிகைக்கு தளபதி படத்தில் வரும் ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பாடல் இருக்கிறது. இதில் போகி பண்டிகைக்கு ஏற்றபடி ‘போடா எல்லாம் விட்டுத்தள்ளு, பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு.. புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா’ என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும்.. அதே படத்தில் ‘மார்கழிதான் ஓடியாச்சு போகியாச்சு’ பாடலயும் ராஜா போட்டிருப்பார்.
ஹோலி
ஹோலி பண்டிகைக்கு நாயகன் படத்தில் வரும் ‘அந்திமழை மேகம்’ பாடல் உள்ளது. இந்த பாலில் வரும் காட்சிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். ஹோலி பண்டிகையை நினைத்தால், பலருக்கு இந்த பாடல் தான் ஞாபகம் வரும்.
இதையும் படிங்க: கங்கை அமரன் அடித்த கமெண்ட்!. கடுப்பான பாலச்சந்தர்!. இளையராஜாவின் பிரிவுக்கு முதல் பொறி!..