தமிழ் சினிமாவில் கெத்து காட்டி அசத்திய வில்லிகள் - ஒரு பார்வை

Athe kangal
தமிழ்த்திரை உலகில் வில்லன்கள் இல்லாத படமே இல்லை எனலாம். அந்த அளவு படங்களில் வில்லன் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வில்லன் கேரக்டர் ஒரு கெத்தாக இருந்தால் தான் ஹீரோவின் கேரக்டரும் ஒரு கெத்தாக இருக்கும்.
வில்லன்களில் வித்தியாசமாக நடிப்பவர்கள் தான் நம் மனதில் நிற்பார்கள். வில்லன்கள் எந்த அளவு படத்தில் கெத்து காட்டினார்களோ அதற்கு நாங்களும் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல என்று வில்லிகளும் வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர்.
அந்தவகையில் வில்லிகள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர். தமிழ்த்திரை உலகில் கெத்து காட்டிய சில வில்லிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ஆயிரத்தில் ஒருவன்

Reema sen
2010ல் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்தில் வில்லியாக ரீமாசென் நடித்து இருப்பார். படத்தில் அவர் வரும் சீன் எல்லாம் அசத்தல் தான்.
கொடி
2016ல் கொடி படத்தில் திரிஷா வில்லி கேரக்டரில் வெளுத்து வாங்குவார். தனுஷ்க்குப் போட்டியாக அரசியலில் களம் இறங்குகையில் அவரது வில்லத்தனம் நம்மை ரசிக்க வைக்கிறது.
பச்சைக்கிளி முத்துச்சரம்

Jothika
2007ல் வெளியான இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா வில்லியாக நடித்துள்ளார். படத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷமான முகம் நம்மை மிரட்டும்.
அதே கண்கள்
2017ல் வெளியான படம் அதே கண்கள். இந்தப் படத்தில் நடிகை ஷிவ்தா வில்லி வேடத்தில் நடித்துள்ளார். புன்னகை காட்டியே வில்லத்தனம் செய்வதில் வல்லவர் இவர். படத்தில் இவர் காட்டும் வில்லத்தனம் நம்மை ரொம்பவே ரசிக்கச் செய்யும் ரகம்.
ஜூலி கணபதி
2003ல் வெளியான இந்தப் படத்தில் நடிகை சரிதா வில்லி வேடத்தை சிறப்பாகச் செய்து இருப்பார். நீண்ட இடைவெளிக்குப் பின் தலைகாட்டிய சரிதா நடிப்பில் வழக்கம் போல அசத்தாமல் வில்லத்தனம் காட்டி அசத்தியிருப்பது வெகுசிறப்பு.
படையப்பா

Ramya Krishnan
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற கேரக்டரில் வில்லியாக நடித்து வெளு வெளு என வெளுத்து வாங்குவார். அதிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு சிறிதும் சளைக்காமல் ஸ்டைல் காட்டி வில்லத்தனம் செய்வார். படத்தில் அவர் பேசும் வசனங்களுக்கும், நடிப்புக்கும் ரசிகர்கள் அவ்வளவு ரசித்து கைதட்டி மகிழ்வர்.
தூள்

sornam
இந்தப் படத்தில் விக்ரமுக்கு வில்லியாக வருபவர் சொர்ணாக்கா. இந்த கேரக்டரில் மிரட்டு மிரட்டு என மிரட்டியிருப்பார். உருட்டும் விழிகளுடன் இவர் பேசும் வசனங்கள் தெறிக்க விடும் ரகம். படத்தைப் பார்க்கும்போது ஒரு பொம்பளைக்கு இவ்ளோ ஆக்ரோஷமா என எண்ணத் தோன்றும்.
மைனா படத்தில் சுசானே ஜார்ஜ், சண்டைக்கோழி 2 படத்தில் வரலட்சுமி, திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி ஆகியோரது வில்லத்தனமான நடிப்பும் செம மாஸாக இருக்கும்.