நயன்தாரா ஐட்டம் டான்ஸ் ஆடிய படங்களின் பட்டியல்!. அட இத்தனை படங்களா!...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். வித்யாசமான கதையாகவும், அதிக முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரமாகவும் இருந்தால் மட்டுமே அந்த படத்தை தேர்வு செய்து நடிக்கிறார் நயன்தாரா. சும்மா ஹீரோவுக்கு பக்கத்தில் நின்றுவிட்டு, ஒரு காதல் காட்சி, 2 டூயட் பாடல்களில் மட்டுமே வரக்கூடிய கமர்ஷியல் படங்களை எல்லாம் தவிர்த்துவிடுகிறார் நயன்தாரா.
ஆனால் ஒரு காலத்தில் படவாய்ப்புகள் இல்லாத போது நயன்தாராவும் பல படங்களில் ஐடம் டான்ஸ் ஆடியுள்ளார். படத்தில் எந்த கேரக்டரும் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடினாலும் போதும் என்ற எண்ணத்தில் ஐடம் டான்ஸ் ஆடியுள்ளார் நயன்தாரா. இதுவரை நயன்தாரா படத்தில் எந்த ரோலிலும் நடிக்காமல் வெறும் ஐடம் டான்ஸ் மற்றும் ஆடிய படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
சிவாஜி- பல்லேலக்கா
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் வரும் பல்லேலக்கா பாடலில் நடிகை நயன்தாரா டான்ஸ் ஆடியிருப்பார். பட வாய்ப்புகள் குறைவாக வந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் படத்தில் டான்ஸ் ஆட எந்த ஹீரோயினாக்காவது கசக்குமா என்ன? அந்த சமயத்தில் கிடைத்த வாய்ப்பை கரெக்டாக பயன்படுத்திக்கொண்டார் நயன்தாரா.
எதிர்நீச்சல்- சத்தியமா நீ எனக்கு
தனுஷ் தயாரிப்பில், சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா, சத்தீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் வரும் சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல பாடலில் தனுஷுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டிருப்பார் நயன்தாரா.
சிவகாசி- கோடம்பாக்கம் ஏரியா
பேரரசு இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான சிவகாசி திரைப்படத்தில் வரும் கோடம்பாக்கம் ஏரியா பாடலில் நயன்தாரா விஜய்யுடன் சேர்ந்து வெறித்தனமாக ஆட்டம் போட்டிருப்பார். இதில் நடிகையாகவே நயன்தாரா வருவார். இந்த பாடலும் அப்போது செம ஹிட்டானது.
20- ஹே தில் தீவானா

Nayanthara
2008ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 20 என்ற படத்தில் வரும் ஹே தில் தீவானா என்ற பாடலில் நயன்தாரா டான்ஸ் ஆடியிருப்பார். இந்த படத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த பாடலும் செம ஹிட் தான்.
இதையும் படிங்க: காதல் மோசடி வழக்கில் ஆதாரத்துடன் சிக்கிய விக்ரமன்.. இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு!…