ஓரெழுத்தில் வெளியான தமிழ்ப்படங்கள் பற்றிய ஓர் அலசல்
ஓரெழுத்து ஒருமொழி என்பது தமிழின் முக்கியமான இலக்கணம். இந்த ஓரெழுத்துக்குப் பல பொருள்கள் உண்டு. வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு இது.
அதனால் தான் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழி என்கிறார்கள். அந்த வகையில் இப்போது ஒரே எழுத்தில் தலைப்பாகக் கொண்டு வெளியான தமிழ்ப்படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
பூ
ஸ்ரீகாந்த், பார்வதி நடிப்பில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது. இந்தப்படத்தில் நடித்த கதாநாயகி பார்வதி அவரது உறவினர் ஒருவரை காதலிக்கும் வகையில் எடுக்கப்பட்டது. மிகவும் மென்மையான கதை அம்சம் கொண்ட இந்தப்படம் பார்ப்பதற்கு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது. இந்தப்படத்தை இயக்கியவர் சசி.
ஐ
விக்ரம், எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய பிரம்மாண்டமான படம் ஐ. இந்த ஓரெழுத்துக்கு அழகு, தலைவன், குரு, ராஜா என பல பொருள்கள் உண்டு. படத்தின் தலைப்புக்கு ஏற்ப படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
2015ல் வெளியான இந்தப்படம் ரசிகர்களை வலுக்கட்டாயமாக திரையரங்கிற்கு வரவழைத்தது. அவ்வளவு பிரம்மாண்டம், தொழில்நுட்பம், இசை என பல புதிய அனுபவங்களைக் கொடுத்த படம் இது.
உ
2014ல் வெளியான ஒரு நகைச்சுவைப் படம். தம்பி ராமையா, வருண், மதன், காளி வெங்கட் உள்பட பலரது நடிப்பில் வெளியான இப்படத்தை ஆஷிக் இயக்கியுள்ளார். அபிஜித் ராமசாமி இசை அமைத்துள்ளார். உ போடுவதை பொதுவாக மக்கள் பிள்ளையார் சுழி என்று சொல்வார்கள். எப்போதும் எழுதத் தொடங்கும் முன் இதைப் போட்டுத்தான் ஆரம்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தப்படமும் வு என வைக்கப்பட்டுள்ளது.
மை
இந்தப்படம் 2015ல் வெளியானது. விஷ்ணுபிரியன், ஸ்வேதா நடிப்பில் சே.ரா.கோபாலன் இயக்கிய படம். மை என்றால் ஆங்கிலத்தில் இங்க் என்று சொல்வார்கள். கண்ணன் இசை அமைத்துள்ளார். இது ஓட்டுக்கு விரல்களில் போடப்படும் மையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
டூ
சஞ்சய், நக்ஷத்ரா நடிக்க ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கிய படம் டூ. இரு நண்பர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு பேசாமல் இருந்தால் சிறுவயதில் அவர்கள் சொல்வது டூ. இதையே படத்தின் தலைப்பாகக் கொண்டுள்ளார்கள். இது ஒரு அருமையான தலைப்பு. 2011ல் வெளியானது இந்தப்படம். அபிஷேக் லாரன்ஸ் இசை அமைத்துள்ளார்.
ரு
இர்பான், ரக்ஷிதா நடிக்க சதாசிவம் இயக்கியுள்ளார். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். 2015ல் வெளியானது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். இது தமிழ் எண் ஐந்தைக் குறிக்கும் ஒரு எழுத்து. இந்தப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் சதாசிவம் அறிமுகமானார்.
கோ
ஜீவா, கார்த்திகா நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கிய படம். 2011ல் வெளியான இந்தப்பத்தில் ஜீவா ஒரு பத்திரிகை போட்டோகிராபராக நடித்துள்ளார். அரசியல் சதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். கோ என்றால் அரசன் என்று ஒரு பொருள் உண்டு. படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படம் ஜீவாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரம்மியமாக இருந்தன.