Cinema News
ஹிட் படங்களை கொடுத்து திடீரென காணாமல் போன நடிகர்கள்!… வெற்றிக்காக போராடும் ஜீவா!…
சினிமாவில் ஒரு சமயத்தில் உச்சத்தில் இருந்த பல நடிகர்கள், சில ஆண்டுகளிலேயே இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள். சினிமாவில் வெற்றி பெருவதற்கு கடின உழைப்பு மட்டும் போதாது. நல்ல படத்தை தேர்வு செய்வது, அதிர்ஷ்டம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். அப்படி காணாமல் போன தமிழ் சினிமா நடிகர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிவா
நடிகர் சிவா தமிழ் படம் வந்த சமயத்தில் புகழின் உச்சத்தில் இருந்தார். அதில் வரும் காமெடி காட்சிகள், அவர் ஆடும் டான்ஸ் என எல்லாவற்றிற்கும் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் அடுத்தடுத்து அவரின் படங்கள் எதுவும் ஓடவில்லை. பல படங்களை தோல்வி அடைந்துவிட்டது. இதனால் அவர் தற்போது பட வாய்ப்புகள் ஏதுமின்றி இருக்கிறார்.
ஜீவா
நடிகர் ஜீவா சிவா மனசுல சக்தி படம் வெளியான சமயத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அதன் பிறகு அவரின் படங்கள் சரியாக ஓடவில்லை. தவறான படங்களை தேர்வு செய்து நடித்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரும் அடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம் படம் வந்த சமயத்தில் பெரிய ஹீரோவாக வருவார் என்று பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு பெரிதாக அவரின் படங்கள் ஓடவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு நண்பன் படத்தில் அவர் நடித்திருந்தார். அதன் பிறகு அவரை படங்களில் பார்க்கமுடியவில்லை.
பிரசாந்த்
நடிகர் பிரசாந்த் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். செம்பருத்தி, ஜீன்ஸ், திருடா திருடா, கண்ணெதிரே தோன்றினால் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக அவரின் படங்கள் எதுவும் ஓடவில்லை.
விஷால்
செல்லமே, சண்டைகோழி, திமிரு என பல ஹிட் படங்களில் நடித்த விஷாலின் சமீபத்திய படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அவ்அப்போது இவரின் படங்கள் சுமாராக ஓடினாலும், முன்பிருந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.
விக்ரம் பிரபு
நடிகர் விக்ரம் பிரபுவின் முதல் படமான கும்கி சூப்பர் ஹிட்டானது. அதற்கு பிறகு பல படங்கள் தோல்வி அடைந்தது. பல ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியான டானாகாரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் அடுத்தடுத்து வெளியான படங்கள் பெரிதாக ஓடவில்லை.
இதையும் படிங்க- நெல்சன் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடுமையா?.. அடுத்தடுத்து மரண அடி.. சிரிப்புக்கு பின் ஒளிந்திருக்கும் சோகம்..