Connect with us

Cinema History

ராரா.. சரசக்கு ராரா.. ராவில் தொடங்கும் புகழ்பெற்ற தமிழ்ப்பட நடிகைகள் – ஒரு பார்வை

தமிழ் நடிகைகளில் ரா என்ற எழுத்தில் தொடங்கும் நடிகைகளுக்கு எப்போதுமே தனி மாஸ் தான். அவர்கள் நடித்த படங்களும் செம ஹிட்டாகி விடுகின்றன. அவர்களில் ஒரு சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

ராஜசுலோசனா

Rajasulochana

இவர் ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானார். 275க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சத்யசோதனை படத்தில் அறிமுகமானார்.

ராஜா ராணி, குலேபகாவலி, மர்ம வீரன், ரங்கோன் ராதா, அலாவுதீனும் அற்புத விளக்கும், பத்தினி தெய்வம், சாரங்கதாரா, அம்பிகாபதி, தை பிறந்தால் வழி பிறக்கும், சகோதரி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி ஆகிய படங்கள் இவரது நடிப்பில் செம மாஸ். இவர் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

ராதா

கேரளாவிலிருந்து தமிழ்சினிமாவுக்கு வந்த கனவுக்கன்னி. தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர். இவரது அக்கா தான் நடிகை அம்பிகா. இருவரும் பல படங்களில் நடித்து கலக்கினர். 91ல் திருமணம் செய்து கொண்டார். துளசி, விக்னேஷ், கார்த்திகா என 3 பிள்ளைகள் உள்ளனர்.

மறுபக்கம், சிகரம், ராஜாதி ராஜா, சின்னப்ப தாஸ், உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம், காதல் பரிசு, ஜல்லிக்கட்டு, இதய கோவில், மெல்லத் திறந்தது கதவு, அம்மன் கோவில் கிழக்காலே, ஒரு கைதியின் டைரி என பல வெற்றிப்படங்களில் நடித்தவர் ராதா.

ராதிகா

இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்தவர். தந்தை எம்.ஆர்.ராதா, தாயார் கீதா. நடிகை நிரோஷா இவரது தங்கை. அரசியல்வாதியும் நடிகருமான ராதாரவி இவரது உடன்பிறவா சகோதரர்.

கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள், இன்று போய் நாளை வா, போக்கிரி ராஜா, மூன்று முகம், பூந்தோட்ட காவல்காரன், ஊர்க்காவலன், தெற்கத்திக்கள்ளன், கிழக்குச் சீமையிலே, சிப்பிக்குள் முத்து, நல்லவனுக்கு நல்லவன், சூர்யவம்சம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ராதிகா ஆப்தே

Actress Radhika Apte

இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் நடித்து அசத்தியவர். தமிழில் கபாலி படத்தில் நடித்துள்ளார்.

வேலூரைச் சேர்ந்தவர். தோனி, ஆல் இன்ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தணா

Rashmika Mandana

கர்நாடகாவின் விராஜ்பெட் என்ற இடத்தில் பிறந்தார். கன்னடம், தமிழ், தெலுங்கு, என பன்மொழிப்படங்களில் நடித்துள்ளார். கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் அறிமுகமானார்.

முதல் படமே மாபெரும் வெற்றி. தெலுங்கில் கீத கோவிந்தம் படத்தில் நடித்தார். அங்கும் மாபெரும் வெற்றி. தமிழில் சுல்தான் படத்தில் நடித்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.

google news
Continue Reading

More in Cinema History

To Top