சாதிப்பிரச்சனையை மையமாகக் கொண்ட படங்கள் - ஒரு பார்வை

by sankaran v |
சாதிப்பிரச்சனையை மையமாகக் கொண்ட படங்கள் - ஒரு பார்வை
X

Virumandi

“சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”என்று மகாகவி பாரதியார் முழங்கி ஒற்றுமை ஏற்பட வழிவகுத்தார். இடையில் சாதிப்பிரச்சனை பூதாகரமானது. தமிழ்ப்பட உலகம் இந்தப் பிரச்சனையை எடுத்துக் கொண்டு விதவிதமாக படங்களைத் தந்துள்ளது. அவற்றில் முக்கியமான சில படங்களைப் பார்ப்போம்.

ஜாதி மல்லி

jaathi malli

1983ல் வெளிவந்த இப்படத்தை கே.பாலசந்தர் இயக்கினார். இரண்டு விதமான காதலை சொன்ன படம். ஜாதிக்கொடுமையைச் சாடிய படம். 1993ல் வெளியான படம். முகேஷ், நாசர், குஷ்பூ, வினீத், யுவராணி, மதன்பாபு, தாமு, விசித்ரா, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். மரகதமணி இசை அமைத்துள்ளார்.

சின்னக்கவுண்டர்

Sinnakavundar2

1992ல் வெளியான படம் சின்னக்கவுண்டர். விஜயகாந்த், சுகன்யா நடித்த மாபெரும் வெற்றிப்படம். 18 பட்டிக்கும் தீர்ப்பு சொல்லி தலைநிமிர்ந்து நிற்கும் சின்னக்கவுண்டரை எதிர்த்து அவர் வாழ்க்கையில் சோதனை தருகிறார் வில்லன்.

தன் கணவருக்காக கொலைப்பழி ஏற்று சிறை செல்கிறாள் சின்னக்கவுண்டர் மனைவி. கடைசியில் எல்லாம் சுபமாய் முடிகிறது.

தேவர் மகன்

Thevar magan

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியான புதுமையான படம் தேவர் மகன். பரதம் இயக்கியது. கமல், சிவாஜி, நாசர், ரேவதி, வடிவேலு உள்பட பலர் நடிததுள்ளனர். தேவர் இனத்துக்குள் நடிக்கும் பங்காளி பகை காரணமாக ஊரில் அடிக்கடி பிரச்சனை நடக்கிறது.

மக்களைக் கட்டிக்காக்கும் தேவரின் சாவிற்கும் பிறகு அந்த இடத்தில் படித்த மகனான நாயகன் தலைமை ஏற்கிறான். வன்முறை வேண்டாம். வெட்டுவதும், குத்துவதும் இந்தத் தலைமுறையோடு போகட்டும் என பங்காளி வில்லனைக் கொன்றுவிட்டு சிறை செல்கிறார் நாயகன். வன்முறை கூடாது என்பதை அழுத்தமாகச் சொன்ன படம்.

சீவலப்பேரி பாண்டி

1994ல் வெளியான படம். பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம். பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு உதவும் நாயகனின் கதை. தென்மாவட்ட மக்களின் கதை என்பதால் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

தேவராட்டம்

Thevarattam

2019ல் எம்.முத்தையா இயக்கத்தில் வெளியான படம். கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், வினோதினி வைத்தியநாதன், பெப்சி விஜயன், பரோட்டா சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளனர்.

விருமான்டி

2004ல் வெளியான படம். கதை, திரைக்கதை எழுதி நடித்து கமல் இயக்கியுள்ளார். கமலுடன் அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

2004ல் தென்கொரியாவில் உலகத் திரைப்பட விழா நடைபெற்றது. 2004க்கான திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. அபிராமி, பசுபதி, நெப்பொலியன் ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

படம் சாதி ரீதியாக பல விமர்சனங்களுக்கு ஆளானது. கமல், அபிராமி, பசுபதி, நெப்போலியன், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ளனர். விருமாண்டியாக கமல் நடித்துள்ளார். கொத்தாலத்தேவனாக பசுபதி நடித்துள்ளார். இதுவும் பங்காளிகளுக்குள் நடக்கும் அடிதடி தான். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர்.

கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன், விருமன் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன், அசுரன் படங்களும் இந்த ரகங்களே.

Next Story