latest news
டி.ஆர்.பி-யில் டாப்பில் இருக்கும் 5 சீரியல்கள்!.. நீச்சல் அடிக்க முடியாம தவிக்கும் எதிர்நீச்சல்
Sun TV Serials: சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கிய பங்காற்றுபவை சீரியல்களே. தொடக்கத்திலிருந்தே சீரியல்கள் என்பது மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அதற்கு காரணம் சீரியல்களில் எடுக்கப்படும் கதைகள் அனைத்தும் மக்களின் நிஜ வாழ்க்கையுடன் ஒன்றிபோவதே ஆகும். மேலும் பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு களமாகவும் சீரியல்கள் விளங்குகின்றன. பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவைகளுக்குள்ளும் பல போட்டிகள் நிலவிக்கொண்டுதான் இருக்கின்றன.
பெரும்பாலும் சன் டிவியில் ஒளிபரப்படும் சீரியல்கள் நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமபுறங்களிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்படுகின்றன. அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் 5 சீரியல்களை தற்போது காணலாம்.
5.சுந்தரி:
சண்டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் டிஆர்பியில் 5 வது இடத்தை பிடித்துள்ளது. பெண் விழிப்புணர்வு சம்பத்தமான கதையாக உருவான இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
4.எதிர்நீச்சல்:
ஒரு காலத்தில் சக்கப்போடு போட்ட சீரியலான எதிர்நீச்சல் மாரிமுத்துவின் இறப்பிற்குபின் மிகவும் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. அதனால் நம்பர்1 இடத்தில் இருந்த இந்த சீரியல் தற்போது 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.
3. வானத்தைப்போல:
ஆரம்பத்தில் நன்றாக போன இந்த சீரியலானது தற்போது கதை போன போக்கில் பயணித்து வருகிறது. இந்த சீரியல் தற்போது ஏதோ முயற்சி எடுத்து 3வது இடத்தை பிடித்துள்ளது.
2. கயல்:
சைத்ரா ரெட்டி கதாநாயகியாய் நடித்து வரும் இந்த சீரியல் தற்போது சற்று விருவிருப்பை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும். எழில்-கயல் காதல் சேரும் வேளையில் இயக்குனர் சீரியலில் டிவிஸ் வைத்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
1. சிங்கப்பெண்ணே:
இந்த சீரியல் சமீபத்தில்தான் வெளிவந்தது. ஆனால் வெளிவந்த கொஞ்ச நாட்களிலேயே இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு இந்த சீரியலின் கதாநாகிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமும் அதை அவர் எடுத்து செல்லும் யுக்தியுமே காரணம். இந்த சீரியல் தற்போது டிஆர்பியில் முதல் இடத்தை பெற்றுள்ளது.