Connect with us
shoba_main_Cine

Cinema News

கே.வி. ஆனந்தை வெளுத்து வாங்கிய ஷோபனா!.. அம்மணிக்கிட்ட போய் அப்படி சொல்லலாமா?..

தென்னிந்திய சினிமா உலகில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர். மலையாள திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷோபனா.

shoba1_cine

shobana

இவர் பரதத்தில் சிறந்து விளங்கும் ஒரு கலைஞரும் ஆவார். நடிகை பத்மினி குடும்பத்தில் இருந்து வந்து இன்று பல பேருக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் தன் கலையில் சிறந்து விளங்கி வருகிறார் நடிகை ஷோபனா. இவரின் பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று விளங்கின.

இதையும் படிங்க : நிஜமாத்தான் சொல்றீங்களா?.. ‘பாபா’ படத்திற்கு பிறகு தன் முடிவை மாற்றிக் கொண்ட ரஜினி!..

அந்த வகையில் மலையாளத்தில் சக்கபோடு போட்ட ‘தேமாவின் கொம்பத்’ என்ற படத்தின் படப்பிடிப்புகளில் நடந்த சில விஷயங்களை அந்த படப்பிடிப்பின் கலைஞர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்தார். தேமாவின் கொம்பத் என்ற படத்தை பிரியதர்ஷன் இயக்க கே.வி.ஆனந்த் தான் அந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர். இந்த படத்தின் மூலம் தான் கே.வி.ஆனந்த் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமாகிறார்.

shoba2_cine

shobana

இவரின் ஒளிப்பதிவில் முதல்வன், பாய்ஸ், சிவாஜி, நேருக்கு நேர், காதல் தேசம் போன்ற பல ஹிட் படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதே சமயத்தில் கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான் போன்ற படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். இந்த நிலையில் தேமாவின் கொம்பத் படப்பிடிப்பின் போது அவருக்கு முதல் படமும் என்பதால் பார்ப்பதற்கு வாலிப பையனாக சிறு வயது தோற்றமுமாக இருப்பார்.

இதையும் படிங்க : 23 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களின் நெஞ்சில் இந்தப் படம் நிக்குதுன்னா அதுக்கு இதுதான் காரணம்..!

அந்த படப்பிடிப்பில் ஷார்டி ரெடி ஆனதும் ஷோபனாவை பார்த்ததும் கே.வி.ஆனந்த் மேடம் இவ்ளோ மேக்கப் தேவையில்லை. முகத்தை கழுவி வந்தாலே போதும், பவுடர் கூட வேண்டாம் என சொன்னாராம். இதை கேட்டதும் ஷோபனாவிற்கு கோபம் வந்து விட்டதாம். எனக்கு எப்படி காட்டவேண்டும் என்று தெரியும், உன் வேலையை பாரு என்று சொல்லிவிட்டு நேராக சோபனா இயக்குனர் பிரியதர்ஷனிடம் போய் நடந்ததை சொல்லியிருக்கிறார்.

shoba3_Cine

kv anand

பிரியதர்ஷனும் கே.வி.ஆனந்தா இதை சொன்னது ? என்று கேட்டு சரி அப்படியே செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம். வேறு வழியில்லாமல் அம்மணி மேக்கப் இல்லாமல் தான் நடித்தாராம். பின்னாளில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதை அறிமுகமான முதன் படத்திலேயே தேமாவின் கொம்பத் படத்திற்காக கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார். இதுவே தமிழில் ரஜினி, மீனா நடிப்பில் வெளிவந்த முத்து திரைப்படம் ஆகும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top