இன்னும் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஐந்து முன்னணி நடிகர்கள்.. அடக்கொடுமையே!..

tamil actors
வாடகை வீட்டில் குடியிருக்கும் நடிகர்கள்..!!
ஐந்து முன்னணி நடிகர்கள் : இன்றைய காலகட்டங்களில் 20 ஆயிரம் 30 ஆயிரம் பணம் சம்பாதித்தாலே லோன் போட்டு வீடு கட்ட ஆரம்பிச்சுடுவாங்க. ஆனா லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட இதுவரை வாடகை வீட்டில் குடியிருக்கும் சில முன்னணி நடிகர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது நடிகர் கவின் இவர் முதன்முதலாக சரவணன் மீனாட்சி இன்னும் சீரியலில் வேட்டையன் எனும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். இவர் நடித்த முதல் சீரியல் நிறைய சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மேலும் இதன்மூலம் இவருக்கு அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இவர் நடித்த சரவணன் மீனாட்சி தொடர் இவருக்கு அடுத்த லெவலுக்கு போக காரணமாக அமைந்தது.

kavin
இந்த நிலையில் இவருக்கு பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஷோவில் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் முன்பு பேராதரவை பெற்றதன் மூலம் திரைப்பட வாழ்க்கையிலும் இவருக்கு முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக லிப்ட் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் ஹாட்ஸ்டார் எனும் ஓட்டிட்டு தளத்தில் வெளியானது மேலும் அனைத்து மக்களின் ஆதரவையும் இந்த திரைப்படம் பெற்றது.
இதை எடுத்து டாடா எனும் திரைப்படத்தின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் நடிகர்களில் நடிகர் கவினும் ஒருவர் ஆவார். அந்த அளவிற்கு இவரது முன்னேற்றம் தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி இருக்கையில் கோடிக்கணக்கில் சம்பளம் ஆகும் நடிகர் கவின் எளிமையாகவே இன்னும் வாடகையை வீட்டில் தான் வசித்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா அப்படி இன்னும் எளிமையாகவே வாடகை வீட்டில் வசித்து வருகிறாராம் நடிகர் கவின்.
இதையும் படிங்க-கமலாம்பாளுக்கு முன்னாடியே சிவாஜி என் மீது ஆசைப்பட்டார் – நடிகை பகீர் வாக்குமூலம்

Kanja karuppu
நடிகர் கஞ்சா கருப்பு முதன்முதலாக ராம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் கஞ்சா வியாபாரம் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்த ஆனால் இவரது உண்மையான தொழிலே கஞ்சா வியாபாரி தனாம். இந்த நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு பருத்திவீரன் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அமீர் இவருக்கு முதன் முதலாக முழு நேர காமெடியனாக வாய்ப்பு கொடுத்தார். இந்த படமே இவரது புகழ் வெளிச்சம் தமிழ் மக்களிடம் வெகுவாக தெரிய வந்தது.
இதனை அடுத்து இவருக்கு நிறைய திரைப்படங்களில் அடுத்தடுத்து காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி காமெடி நடிகனாக வாழ்ந்து வந்த கஞ்சா திடீரென்று தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் குதித்தார். முதல் முதலாக வேல்முருகன் போர்வெல்ஸ் எனும் திரைப்படத்தை தயாரித்தார் இந்த படம் மோசமான தோல்வியை சந்தித்ததன் மூலம் முதல் படத்திலேயே தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் பறி கொடுத்தார். மேலும் இந்த படத்தை நிறைய கடன்கள் வாங்கியும் வட்டிக்கு வாங்கியும் தயாரித்திருக்கிறார் ஆதலால் கடன் காரர்கள் இவரை தினமும் துரத்தவே தன்னிடம் இருந்த வீட்டை பறி கொடுத்தார். இந்த நிலையில் தற்சமயம் வரை ஒரு வாடகை வீட்டில் தான் குடி இருக்கிறார் கஞ்சா கருப்பு.

Mari mutthu
அடுத்ததா நம்ம பாக்க போற நடிகர் இந்த மா ஏய் என்ற வசனத்தில் தற்சமயம் மிகவும் பிரபலமாக வலம் வரும் இயக்குனர் மாரிமுத்து தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் அற்புதமான தனது நடிப்பினை வெளிப்படுத்துகிறார் மாரிமுத்து. இவர் ஆரம்ப காலங்களில் நடிகர் ராஜ்கிரண் அவர்களுக்கு இயக்குனராக நிறைய திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். மேலும் எஸ் ஜே சூர்யா மணிரத்தினம் போன்ற இயக்குனர்களிடமும் பணிபுரிந்து இருக்கிறார் மாரிமுத்து. ஆரம்ப காலங்களில் இவருக்கு போதிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் வாய்ப்புக்காக ஏங்கி தவித்துக் கொண்டிருந்தார்.
பிறகு யுத்தம் செய் எனும் திரைப்படத்தின் மூலம் இவரது நடிப்பை பார்த்த தமிழ் உலகம் இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கொடுக்க ஆரம்பித்தது இவர் நடித்த பரியேறும் பெருமாள் என்னும் திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு அடுத்த லெவலுக்கு வருவதற்கு காரணமாக இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் மாரிமுத்து அவர்கள் ஆரம்ப காலங்களில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து பிறகு சினிமாவில் தற்சமயம் நிறைய திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் தற்சமயம் வரை இன்னும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார் மாரிமுத்து.

Parthiban
அடுத்ததாக இயக்குனர் பார்த்திபன் நிறைய திரைப்படங்களில் இயக்குனராகவும் நடிகராகவும் பணிபுரிந்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் ஒரு நீங்காத இடத்தை பிடித்து தற்சமயம் வரை நிறைய இளம் இயக்குனர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.இவர் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ஒரு வித்தியாசமான கதைகளை கொண்டு எடுக்கும் திறமை உடையவர். இவர் எப்பொழுதும் ஆடம்பர வாழ்க்கையை விரும்ப மாட்டார் ஆதலால் இன்று வரை வீடு கட்டாமல் வாடகை வீட்டில் தான் குடியேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijaylakshmi
அடுத்ததாக விஜயலட்சுமி அவர்களுக்கு 2019 வெளியான பிரண்ட்ஸ் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. மேலும் இவர் தற்சமயம் அரசியலில் தமிழ்நாட்டில் மூன்றாவது கட்சியில் இருக்கும் சீமான் அவர்களுடன் முன்பு தொடர்பில் இருந்துள்ளார். மேலும் இவர் சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நிறைய கஷ்டங்களை எனக்கு கொடுத்துள்ளார் என்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று அப்பட்டமாக அனைத்து சமூக வலைதளங்கள் வழியாகவும் சீமானுக்கு எதிராக நிறைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.இவர் வெளியிடும் சர்ச்சையான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நிறைய பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி இன்றுவரை நான் ஒரு வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறேன் எனக்கு சொந்தமாக வீடு கூட கிடையாது என்று மக்கள் முன்பு தன்னுடைய கஷ்டங்களை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க-நடிச்சது போதும்!.. ரிட்டயர்ட் ஆயிடு தலைவா!.. ஜெயிலரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!..