மக்களை முட்டாளாக்கிய சில திரைப்படங்கள்.. என்னங்க இந்த லாஜிக்கை எப்படி மறந்தீங்க... இந்த மாஸ் ஹிட் படமுமா?!

by Akhilan |
மக்களை முட்டாளாக்கிய சில திரைப்படங்கள்.. என்னங்க இந்த லாஜிக்கை எப்படி மறந்தீங்க... இந்த மாஸ் ஹிட் படமுமா?!
X

தமிழ் சினிமாவில் சில படங்களில் செய்யப்படும் லாஜிக் குளறுபடிகள் மிக அபத்தமாகவே இருக்கும். அதில் சிக்கிய சில படங்கள் உங்கள் பார்வைக்கு.

துள்ளாத மனமும் துள்ளும்:

இந்த படத்தில அப்படி என்ன லாஜிக் மீறலுனு கேட்குறீங்களா? இந்த படத்தில் விஜயை நேரில் சந்திக்காத நடிகை சிம்ரன் குட்டி என்ற பெயரை மட்டுமே தெரிந்து வைத்திருப்பார். அடுத்து அவருக்கு அந்த குட்டியின் குரல் மட்டுமே படத்தில் தெரியும். அப்போ இப்படத்தில் விஜய் பாடும் பாடலுக்கு ஒரே குரலை தானே பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இந்த படத்தில் விஜயிற்கு பாட ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன் மற்றும் கோபால் ராவ் ஆகியோர் பாடி இருப்பார்கள். சிங்கராக நடித்த விஜயிற்கு மூன்று பாடகர்கள் பாடி இருப்பதே லாஜிக் மீறல் தானே.

sarkar

சர்கார்:

விஜயின் முக்கிய வெற்றி படமாக இருந்த சர்கார் படத்திலும் ஒரு லாஜிக் மீறல் இருக்கிறது. இவரின் வாக்கை இன்னொருவர் செலுத்தி விட்டதாக கூறி வழக்கு தொடர்ந்து அந்த தேர்தலையே ரத்து செய்ய வைத்திருப்பார். பின்னர் அவரே மாணவர் கூட்டத்துடன் இணைந்து தேர்தலிலும் போட்டியிடுவார். ஆனா, படத்தில் அவரின் ஓட்டினை கள்ள ஓட்டாக போட்ட யோகி பாபுவுடன் ஆடிக்கொண்டு இருப்பார். என்னங்க தளபதி இப்படி?

இதையும் படிங்க: தனுஷ், சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படத்தில் விஷ்ணு விஷால்… அதுவும் அந்த டாப் இயக்குனரோட படத்திலயாம்…

பாளையத்து அம்மன்:

மீனா, ராம்கி மற்றும் திவ்யா உன்னி ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் பாளையத்து அம்மன். இப்படத்தில் திவ்யா உன்னியின் குழந்தையை கேட்டு அம்மனாக நடித்திருந்த மீனா பூலோகத்திற்கு இறங்கி வந்திருப்பார். சாமி படம் என நினைத்து பார்த்தால் சைடில் விவேக் ஒரு காமெடி ட்ராக்கை ஓட்டி இருப்பார். அதில் எல்லாம் மூட நம்பிக்கை. சாமி இல்லை ஜோசியம் இல்லை எனக் கூறியிருப்பார். இயக்குனர் என்ன சொல்ல வராரோ!

Next Story