இத பார்க்கும் போது நான் சேடிஸ்ட்டானு எனக்கே தோணுது… மீம்களால் பீலிங்கான லோகேஷ்…
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இயக்குனர்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு நான் தான் ராஜா என்ற அளவில் ட்ரெண்ட் டைரக்டராக இருப்பவர் தான் லோகேஷ். அவர் இயக்கினாலே போதும்பா படம் ஆகாஓஹோ ஹிட் அடித்து விடும் எனப் பேசும் அளவுக்கு தன்னை வளர்த்து விட்டார்.
மாநகரம் படம் மூலம் சினிமாவிற்குள் எண்ட்ரியான லோகேஷ் தன்னுடைய முதல் படத்திலேயே பேச வைத்தார். அவர் மீது இருந்த நம்பிக்கையால் அவருக்கு தன்னை இயக்கும் வாய்ப்பை கொடுத்தவர் கார்த்தி. அதை உறுதி செய்யும் விதமாக கைதி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் படமாக அமைந்தது.
இதையும் படிங்க- அண்ணாமலை படத்தில் அந்த சீனே இல்ல ; சரத்பாபு ஐடியாதான் அது: இயக்குனர் சொன்ன ரகசியம்
இதையடுத்து லோகேஷ் விஜயை வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கினார். அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதையடுத்து தன்னுடைய ஆஸ்தான நாயகனான கமலை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டார் லோகேஷ். பல நாட்களாக ஒரு வெற்றிக்கு ஏங்கி கொண்டு இருந்த கமலுக்கு இந்த படம் சொல்ல முடியாத அளவு வசூலையும், விமர்சன வெற்றியினையுமே கொடுத்தது.
இதனால் பல தரப்பிலும் லோகேஷ் கொண்டாடப்பட்டு வருகிறார். அதை தொடர்ந்து அவருக்கு மீண்டும் விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு லியோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜயுடன், சஞ்சய் தத், அர்ஜூன் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். படத்தின் க்ளிம்ஸ் வீடியோக்கள் இணையத்தில் செம வைரலாகி வரும் நிலையில், லோகேஷ் ஒரு தகவலை கசியவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க- என் படம் கூட ஜெயிலரை கம்பேர் பண்ணாதீங்க.. கொந்தளித்த பாட்ஷா பட இயக்குநர்
ஒரு விருது விழாவில் லோகேஷிடம் தொகுப்பாளர்கள், ஏன் சார் உங்க படத்துல நாயகனும், நாயகியும் சேரவே மாட்டாங்களா எனக் கேட்கிறார்கள். அதற்கு பதிலளிக்கும் லோகேஷ் எனக்கே அந்த வீடியோ மீம்ஸ்களை பார்க்கும் போது எனக்கே நான் சேடிஸ்ட்டானு தோணுது எனச் சிரித்து கொண்டே கூறினார். அது கதைக்கு தேவைப்பட்டது. இனி வச்சிருவோம் என்றார்.
இதற்கு ஒரு கேள்வி வைத்த தொகுப்பாளர்கள் அப்போ லியோவில் எதிர்பார்க்கலாமா எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு லோகேஷ் சிரித்து மழுப்பிவிட்டார் என்றாலும் ஐகானிக் ஜோடியான த்ரிஷா-விஜயிற்காக சில காட்சிகள் இருக்கும் என்றே நம்பப்படுகிறது.