தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ். இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அனைத்து மொழி சினிமா பிரபலங்கள் தேடும் இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

அந்த அளவுக்கு இவர் இயக்கிய படங்கள் லோகேஷின் பெருமையை திறமையை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் தன் கடின உழைப்பால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார்.
முதல் படத்தில் இருந்து விக்ரம் படம் வரை புதிய புதிய கதைகளத்தோடு படத்தை கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் சமூகத்தை சீர்குலைக்கும் விஷயங்களை பற்றி தான் இவரின் படங்கள் வெளிவந்திருக்கின்றன.

தற்போது லியோ படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். எப்போது லியோ படம் தொடங்கப்பட்டதோ அதில் இருந்தே தினந்தினம் லியோ படத்தை பற்றிய அப்டேட்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
மேலும் கடும் பனிப்பொழிவுகளுக்கும் மத்தியில் ஒட்டுமொத்த படக்குழுவையும் ஒரு சேர அணைத்து முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் லோகேஷ். இந்த நிலையில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் லோகேஷ் தனது நண்பரான ஆர்.ஜே.பாலாஜிக்காக ஒரு செயலை செய்திருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இப்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பாலாஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு சிறிய முக்கியமான
கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் லோகேஷ்.
இதையும் படிங்க : செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருந்துச்சு..- பிரபல இயக்குனரின் தவறை உணர்த்திய சத்யராஜ்!
மேலும் அந்தப் படத்தில் லோகேஷின் நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தால் மேலும் நடிகராகவும் புதிய அவதாரம் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது என பாலாஜி கூறிய செய்தி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
